கோலிவுட்டை கொலம்பியாவரை கொண்டு சென்றவர்.. ரஹ்மான் பிறந்தநாள்.. டிவிட்டரை தெறிக்கவிடும் ஃபேன்ஸ்!
சென்னை: இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் பிறந்த நாளை முன்னிட்டு டிவிட்டர் தளத்தை நெட்டிசன்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.
உலகம் முழுக்க பிரபலமானவர் இசையமைப்பாளரான ஏஆர் ரஹ்மான். இவரது இசைக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்கவும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்திய சினிமாவின் ஆஸ்கர் கனவை நனவாக்கியவர் ஏஆர் ரஹ்மான். இசைப்புயல் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும்இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இன்று தனது 53வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

வாழ்த்து
இதனை முன்னிட்டு அவருக்கு டிவிட்டரில் ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
#HappyBirthdayARRahman, #HBDARRahman என்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ட்ரென்டிங்
#HappyBirthdayARRahman, #HBDARRahman ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரென்டிங்கில் உள்ளன. #HappyBirthdayARRahman என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரென்டிங்கில் டாப்பில் உள்ளது.
அமைதிக்காக விடிகவே
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே
தாயின் கத கதப்பில்
உலகம் விடியட்டுமே
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில் என ரஹ்மான் இசையில் வெளியான பாடல்களை பதிவிட்டு வாழ்த்து கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
ஒரு விரல் புரட்சி
எல்லாப்புகழும் -இளைஞர்களின் அடையாளம்
சிங்கப்பெண்ணே- பெண்களின் அடையாளம்
ஆளப்போறான் தமிழன் - தமிழர்களின் அடையாளம்
ஒரு விரல் புரட்சி - ஒட்டு மொத்த மக்களின் அடையாளம்.. என்று ஏஆர் ரஹ்மானின் இசையை புகழ்ந்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
ஆஸ்கர் நாயகன்
எல்லா புகழும் ஒருவனுக்கே !! இசை புயல், ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !! என தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
நீண்ட சிறப்பு
இசையால் உலக மக்களின் இதயங்களில் வீற்றிருக்கும் இசைப்புயல் அண்ணன் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் என்றென்றும் நீண்ட சிறப்புடன் பேருவகை பெற்றிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.
"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என தெரிவித்திருக்கிறார் இவர்.
கொலம்பியா
இன்று உலகை சூழ புயலின் பிறந்தநாள் இசைப்புயல் கோலிவுட்டை கொலம்பியா வரை கொண்டு சேர்த்தவன்... என ரஹ்மானை புகழ்ந்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
நீரின் அருமை
காதலின் அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே.. என ரஹ்மான் இசையில் ஹிட்டடித்த ரிதம் பாடலை பகிர்ந்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
இசை சக்கரவர்த்தி
அன்பில் சிறந்தவர்
ஆஸ்கர் நாயகன்
இசை சக்கரவர்த்தி
ஈடு இணை இல்லா கலைஞன்
இசைக்கு இன்று பிறந்தநாள்.. அன்றும் இன்றும் என்றும் இசை புயல் நீ ஒருவரே என்று வாழ்த்து கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
ஏக இறைவன்
இசையின் ஏக இறைவனுக்கு ஹாப்பி பர்த்டே என வாழ்த்து கூறியிருக்கிறார் இவர்.
ஜீனியஸுக்கு பிறந்தநாள்
இசை ஜீனியஸுக்கு பிறந்த நாள் வாழ்த்து என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











