பழச மறந்துட்டு புது வாழ்க்கையை தொடங்குங்க.. இயக்குநர் விஜய்க்கு ரசிகர்கள் வாழ்த்து!

சென்னை: இரண்டாவது திருமணம் செய்துகொண்ட இயக்குநர் ஏஎல் விஜய்க்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஏஎல் விஜய். இவர் தான் இயக்கிய தெய்வத்திருமகள் மற்றும் தலைவா படத்தில் நடித்த அமலா பாலை கடந்த 2014ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்தார்.

பின்னர் இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து செய்துகொண்டனர். இதைத்தொடர்ந்து இருவரும் அவரவர் வேலையில் கவனம் செலுத்தி வந்தனர்.

எளிமையாக திருமணம்

எளிமையாக திருமணம்

இந்நிலையில் இயக்குநர் விஜய் நேற்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவரை ஏஎல் விஜய் திருமணம் செய்துள்ளார். ரொம்பவும் எளிமையான முறையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

ஐஸ்வர்யா ஒரு பொதுநல மருத்துவர் ஆவார். முதல் திருமணமும் திருமண வாழ்க்கையும் எதிர்பார்த்தப்படி இல்லாத நிலையில் இரண்டாவது திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமைய வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மகிழ்ச்சியான வாழ்க்கை

இன்று திருமணம் செய்த டாக்டர் ஐஸ்வர்யாவுடன் மகிழ்ச்சியான மற்றும் ஆசிர்வதிக்கப்பட்ட திருமண வாழ்க்கை இயக்குநர் ஏஎல் விஜய்க்கு அமைய வேண்டும் என இவர் வாழ்த்தியுள்ளார்.

பழசை மறந்துவிடுங்கள்

இதுதான் பொண்ணு.. திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமையட்டும் ஏஎல் விஜய் கடவுள் ஆசிர்வாதமும் கிடைக்கட்டும். பழையதை மறந்துவிட்டு புதிய வாழ்க்கையை தொடங்குங்கள்.. என பதிவிட்டுள்ளார் இவர்.

இரண்டாவது இன்னிங்ஸ்

ஏஎல் விஜய் அண்ணா இரண்டாவது இன்னிங்ஸ் மகிழ்ச்சியாக அமையட்டும்.. என வாழ்த்தியிருக்கிறார் இவர்.

இனிய திருமண வாழ்க்கை

இனிமையான திருமண வாழ்க்கை அமையட்டும் ஏஎல் விஜய் அண்ணா.. என பதிவிட்டிருக்கிறார் இவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X