பிரியாணியுடன் ரசத்தை கலந்துக்கட்டி அடிக்கும் பிரபல நடிகை.. காம்பினேஷனை கேட்டு தலைசுற்றும் ஃபேன்ஸ்!

சென்னை: பிரியாணிக்கு ரசத்தை கலந்துக்கட்டி அடிப்பேன் என பிரபல நடிகை கூறியிருப்பது அவரது ரசிகர்களை தலை சுற்ற வைத்துள்ளது.

தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா.

அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் உள்ள ராஷ்மிகா வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

உற்சாகப்படுத்தும் ஃபேன்ஸ்

உற்சாகப்படுத்தும் ஃபேன்ஸ்

தமிழில் சுல்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. லாக்டவுன் நேரத்தில் அவ்வப்போது ரசிகர்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் உரையாடி வருகிறார். அவர்களின் கேள்விக்கு பதில் அளித்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் ராஷ்மிகா.

வீடியோ சாட்

வீடியோ சாட்

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா, ரசிகர்களுடன் வீடியோ லைவ் சாட்டில் ஈடுபட்டார். அப்போது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார் ராஷ்மிகா மந்தனா. அந்த உரையாடலில் தனது தனிப்பட்ட ரகசியங்கள், பள்ளி நினைவுகள், அன்றாட படப்பிடிப்பு அனுபவம் மற்றும் பலவற்றை வெளிப்படுத்தினார்.

உணவு சேர்க்கை?

உணவு சேர்க்கை?

அந்த வகையில் ஹோட்டலில் இருந்த தலையணை உறையை திருடியதாக கூறி பரபரப்பை கிளப்பினார். அதனை தொடர்ந்து தனது உணவு பழக்க வழக்கத்தையும் கூறி ரசிகர்களை தலை சுற்ற வைத்துவிட்டார். அதாவது ரசிகர் ஒருவர் அவரிடம் நீங்கள் சாப்பிட்ட வித்தியாசமான உணவு சேர்க்கை என்ன? என்று கேட்டார்.

பிரியாணியுடன் ரசம்

பிரியாணியுடன் ரசம்

அதற்கு பதில் அளித்த ராஷ்மிகா மந்தனா உங்களுக்கு தெரியுமா நான் வித்தியாசமான உணவு காம்போவின் ராணி. நான் ரசத்துடன் பிரியாணியை சேர்த்து சாப்பிடுவேன், எனக்குத் தெரியும்.. முறைக்காதீங்க.. மேலும் தயிர் சாதத்துடன் லேஸ் வைத்து சேர்த்து சாப்பிடுவேன். இது மிகவும் நன்றாக இருக்கும். நான் விளையாடவில்லை, அது மிகவும் நன்றாக இருக்கும்.

Recommended Video

Rashmika Reply to Memers | Rashmika mandanna Vadivelu Meme | Bheeshma
கலந்தே சாப்பிடலாம்

கலந்தே சாப்பிடலாம்

மேலும் நூடுல்ஸுடன் லேஸ் சேர்த்து சாப்பிடவும் எனக்கு பிடிக்கும். இது எனது அன்றாட வழக்கம், பருப்பு மற்றும் தயிர் மற்றும் வேறு எந்த காய்கறி கறியுடன் யோகர்ட் என எல்லாவற்றையும் கலந்து சாப்பிடுகிறேன், ஏனென்றால் அது உங்கள் வயிற்றுக்குச் சென்றதும் அது எப்படியாவது கலக்கதான் போகிறது. அதை ஏன் நாம் கலந்தே சாப்பிடக்கூடாது என கேட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X