சூர்யாவுக்கு ஜோடியாய் நடித்தாரே.. அந்த நடிகையா இவர்.. 34 வயதில் இவ்ளோ பெரிய மகனுக்கு அம்மா!
சென்னை: நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகாவின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2002ஆம் ஆண்டு வெளியான சூர்யாவின் ஸ்ரீ படத்தில் நடித்தவர் ஸ்ருதிகா. அந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ருதிகா.
தன்னுடைய 15 வயதிலேயே ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு ஹிட்டாகவில்லை.

அடுத்தடுத்து படங்கள்
பாக்ஸ் ஆபிஸிலும் சொதப்பலோ சொதப்பலாய் இருந்தது. அதோடு நடிகை ஸ்ருதிகாவுக்கு நடிப்பே வரவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இருந்த போதும், அடுத்தடுத்து தமிழில் ஆல்பம், நள தமயந்தி, தித்திக்குதே ஆகிய படங்களில் நடித்தார்.

திருமணம்
ஸ்வப்னம் கொண்டு துலாபாரம் என்ற மலையாள படத்திலும் நடித்தார் ஸ்ருதிகா. நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான ஸ்ருதிகா, நடிகர் யோகியின் கஸின் ஆவார். நடிப்பு வராததால் சினிமாவுக்கு முழுக்கு போட்ட ஸ்ருதிகா அர்ஜூன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

வைரலாகும் போட்டோ
அவருக்கு ஆரவ் என்ற மகன் உள்ளார். தற்போது 34 வயதாகிறது ஸ்ருதிகாவுக்கு. இந்நிலையில் திடீரென சமூக வலைதளங்களில் அவரது போட்டோக்கள் வைரலாகி வருகிறது. அதற்கு காரணம் அவரது மகன் தான்.

இவ்ளோ பெரிய மகனா?
ஸ்ருதிகாவுக்கு அவ்வளவு பெரிய மகன் உள்ளார். எப்படியும் அவருக்கு 10 வயதுக்கு மேல் இருக்கும். இன்ஸ்டாகிராமில் ஸ்ருதிகா தனது மகனுடன் இருக்கும் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஸ்ருதிகாவுக்கு இவ்ளோ பெரிய மகனா என ஆச்சரியப்பட்டுள்ளனர்.
Recommended Video

அப்படியே இருக்கிறார்
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள ஸ்ருதிகா அடிக்கடி தனது கணவர், மகன் மற்றும் தோழிகளுடன் ஊர் சுற்றும் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். இவ்வளவு பெரிய மகனுக்கு தாயான போதும் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஸ்ரீயில் பார்த்த அதே இளமையுடன்தான் உள்ளார் ஸ்ருதிகா.


Click it and Unblock the Notifications











