Don't Miss!
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எலும்பும் தோலுமாய் மாறிய அஞ்சலி.. காஞ்ச எலி போல ஆயிட்டீங்க.. போட்டோவை பார்த்து உருகும் ரசிகாஸ்!
சென்னை: நடிகை அஞ்சலியின் நியூ லுக் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் காஞ்ச எலி போல ஆகிவிட்டீர்களே என பங்கம் செய்துள்ளனர்.
நடிகை அஞ்சலி போட்டோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ள அஞ்சலி, தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
குழந்தையின் வாழ்க்கையை காக்க உதவுங்கள். ஆதரவு தாருங்கள்
தமிழ் தெலுங்கில் பிஸி
அடிக்கடி கிசுகிசுவிலும் சிக்கி வருகிறார் அஞ்சலி. குறிப்பாக நடிகர் ஜெய்யுடன் அஞ்சலியின் பெயர் அடிக்கடி அடிப்பட்டுள்ளது. நடிகை அஞ்சலி நிஷப்தம், ஆனந்த பைரவி, வக்கீல் சாப் ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஓ, பாவ கதைகள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ஹெல்த் கான்ஷியஸ்
கடந்த சில மாதங்களாக லாக்டவுன் காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தார் அஞ்சலி. ஆனாலும் உடற்பயிற்சி, யோகா என ஹெல்த் கான்ஷியசுடனும் இருந்தார். தனது அப்டேட்டுகளை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வந்தார் நடிகை அஞ்சலி.
அஞ்சலியா இது?
இந்நிலையில் சமீப காலமாக அவர் ஷேர் செய்த போட்டோக்களிலும் வீடியோக்களிலும் அவர் ரொம்பவே எடை குறைந்து போய் செம்ம ஸ்லிம்மாக உள்ளார். அதிலும் குறிப்பாக கடைசியாக அவர் வெளியிட்ட கறுப்பு நிற பேண்ட் ஷர்ட் போட்டோவில், அஞ்சலியா இது என கேட்கும் அளவுக்கு உள்ளார்.
காஞ்ச எலி மாதிரி
அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். அஞ்சலியா இது.. என்ன காஞ்ச எலி மாதிரி ஆயிட்டீங்க என்று கேட்டுள்ளனர். இன்னும் சிலர் ஏதோ நோய் வந்தது போல் இருக்கிறீர்கள் என்றும் கேட்டுள்ளனர். சிலர் எடையை குறைத்ததால் அடையாளமே தெரியவில்லை என்றும் கூறியிருக்கின்றனர்.
5ஆம் கிளாஸ் பொண்ணு
அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் ஸ்லீமானாலும் செமயாக இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளனர். இதேபோல் அஞ்சலியின் மற்றொரு போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் 5 ஆம் வகுப்பு மாணவி போன்று இருக்கிறீர்கள் என கூறியுள்ளனர். ஸ்லீம்மாக இருப்பது உங்களுக்கு கொஞ்சமும் சூட்டாகவில்லை என்றும் கூறியிருக்கின்றனர்.
Recommended Video
பழையப்படி வாங்க
சில நெட்டிசன்கள் ஏன் இவ்ளோ டல்லா ஆயிட்டிங்க.. பார்க்கவே கஷ்டமா இருக்கு.. தயவு செஞ்சு பழையப்படி வாங்க என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். என்னாச்சு ஏன் தினமும் இப்படி குறைந்து கொண்டே போகிறீர்கள் என்றும் ரசிகர்கள் தங்களின் கவலையை பதிவிட்டுள்ளனர்.