அடுத்த வருஷம் டும் டும் டும்... திருமணத்தை அறிவித்த பிரபல காதல் ஜோடி!
மும்பை: பாலிவுட்டில் அதிகம் கவரப்படும் காதல் ஜோடியான ஃபர்கான் அக்தர், ஷிபானி தண்டேகர் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஃபர்கான் அக்தர். இவர் கடந்த 2000ஆம் ஆண்டு அதுனா பாபனி என்பவரை மூன்றாண்டு காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஷக்யா மற்றும் அகிரா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர்.

பீச்சில் கட்டிப்பிடித்து..
இதனை தொடர்ந்து ஐபிஎல் தொகுப்பாளினியும் பாலிவுட் நடிகையுமான ஷிபானி தண்டேகரும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர். இருவரும் பீச்சில் அரைகுறை ஆடையில் கட்டிப்பிடித்து விளையாடும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகும்.

லிவிங் டுகெதர்
இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர் சுற்றி வந்தனர். அந்த போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக லிவிங் டுகெதர் முறையிலும் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.

தீபிகா ரிசெப்ஷன்
ஒரு கட்டத்தில் இருவரும் தங்களின் காதலை உறுதி செய்தனர். மேலும் பார்ட்டி, சினிமா நிகழ்ச்சிகள் என அனைத்திலும் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற தீபிகா படுகோன், ரன்வீர் சிங் திருமண ரிசெப்ஷனிலும் இந்த ஜோடி கலக்கலாக பங்கேற்றது.

தீபாவளி கொண்டாட்டம்
ஷிபானி ஃபர்கான் மகள்களுடனும் குடும்பத்துடனும் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் தீபாவளி பண்டிகையை கூட ஷிபானி, ஃபர்கான் அக்தர் வீட்டில் கொண்டாடியிருக்கிறார். இதுதொடர்பான போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டன.

இன் ஏப்ரல் வி மே
இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றில் இருவரும் நேர்காணல் அளித்தனர். அதில் ஷிபானி, தனது காதலரான ஃபர்கான் அக்தரிடம் நாம் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் ஏப்ரலா அல்லது மேவா? என கேட்டார். அதற்கு ஃபர்கான் அக்தர் சிரித்துக் கொண்டே "இன் ஏப்ரல் வி மே" என நகைச்சுவையாக பதிலளித்தார்.

பாலிவுட்டில் பரபரப்பு
இதனால் காதல் ஜோடி வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் திருமணம் செய்து கொள்வார்கள் தெரிகிறது. இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் காதல் வானில் சிறகடித்து பறந்து வந்த காதல் ஜோடி அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்திருப்பது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











