twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுஷாந்த் சிங் மரணம்.. நான் சமீப காலங்களில் சந்தித்த மிகப்பெரிய துயரம்.. பிரபல நடிகர் உருக்கம்!

    |

    சென்னை: சுஷாந்த் சிங் மரணமடைந்து 15 நாட்கள் ஆகவுள்ள நிலையில் அவரது மரணம் குறித்து பிரபல நடிகரும் இயக்குநருமான ஃபர்ஹான் அக்தர் உருக்கமாக பேசியுள்ளார்.

    Recommended Video

    Sushant Singh இறப்பில் தொடரும் மர்மம்

    நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14ஆம் ஆண்டு மும்பையில் உள்ள அவரது அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சுஷாந்த் சிங் ராஜ்புத் அதிக மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    அவரது தற்கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக சுஷாந்துக்கு நெருக்கமான பலரிடமும் விசாரணை நடத்தி வருகின்றன.

    நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணத்தால் பாதிக்கப்பட்ட படங்கள்.. அதிரடி முடிவெடுத்த தம்பி! நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணத்தால் பாதிக்கப்பட்ட படங்கள்.. அதிரடி முடிவெடுத்த தம்பி!

    ஃபர்ஹான் அக்தர்

    ஃபர்ஹான் அக்தர்

    சுஷாந்த்தின் தற்கொலைக்கு பாலிவுட்டில் உள்ள வாரிசுகள்தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து பிரபல நடிகரும் இயருக்குநருமான ஃபர்ஹான் அக்தர் மனம் திறந்து பேசியுள்ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,

    மிகப்பெரிய துயரம்

    மிகப்பெரிய துயரம்

    சமீப காலங்களில் நான் சந்தித்த மற்றும் சிந்தித்த மிகப்பெரிய துயரங்களில் இதுவும் ஒன்றாகும். சுஷாந்தின் மரணம் சகோதரத்துவத்திற்கு மிகப்பெரிய இழப்பு. அவரது குடும்பத்திற்கு சுவாசிக்ககூட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதை காணும்போது அது உங்களை கோபப்படுத்துகிறது. சுஷாந்த் ஏன் தற்கொலை செய்தார் என்பது குறித்த கோட்பாடுகள் பரப்பப்படுகின்றன.

    அரவணையுங்கள்

    அரவணையுங்கள்

    அதற்கான நேரம் இதுவல்ல. சிறிது காலம் போகட்டும். இப்போதே தூண்டுதல் முதல் கொலை வரை என ஊகங்கள் எழுந்துள்ளது. எல்லோருக்கும் திடீரென்று அவர் என்ன நினைத்தார், அவரது பயணம் மற்றும் அவரைப் பற்றிய அனைத்தும் தெரியும். தயவு செய்து எல்லோரையும் அரவணைத்து இருங்கள், விழிப்புடன் இருங்கள்.

    நாம் இழந்துவிட்டோம்

    நாம் இழந்துவிட்டோம்

    ஆனால் இப்போது அனைவருக்கும் வாள் அல்லது கேடயம் கிடைத்திருக்கிறது. இது அசிங்கமானது. அவரது சிறந்த வேலை மற்றும் திறமைக்காக நாம் அவரை நினைவில் கொள்ள வேண்டும், பெரும் திறனைக் கொண்ட ஒருவரை நாம் இழந்துவிட்டோம் என்ற உண்மையை துக்கப்படுத்துங்கள்.

    வாரிசுகளுக்கு சாதகம்

    வாரிசுகளுக்கு சாதகம்

    நம்முடைய சினிமா தொழில் வெற்றி மற்றும் தோல்வியில் மட்டுமே செயல்படுகிறது. ஆனால் திரைத்துறை வாரிசுகளுக்கு சாதகமாக இருக்கிறதா என்றால் நிச்சயமாக ஆமாம் என்றுதான் சொல்வேன். அவர்கள் ஸ்கிரிப்டைத் தேர்ந்தெடுப்பது அல்லது ஒரு நடிகராக அவர்களின் சேவைகளை பெறுவது ஆகியவை அவர்களுக்கு எளிதாக இருக்குமா? என்று கேட்டால் 100% சதவீதம் இருக்கும் என்றுதான் சொல்வேன். அதை மறுப்பதற்கில்லை.

    பெற்றோரின் உழைப்பு

    பெற்றோரின் உழைப்பு

    இது ஒரு மோசமான விஷயம் என்று அர்த்தமா? என்றால் இல்லை. உங்கள் பெற்றோர் உங்களுக்கு பாதுகாப்பான ஒரு தலைக்கவசத்தை வழங்க நம்பமுடியாத அளவிற்கு கடினமாக திரைத்துறையில் உழைத்துள்ளனர். ஆனால் அதேநேரத்தில் வெளியில் இருந்து வருபவர்கள் அனைவரும் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதில் உண்மையல்ல. பாலிவுட்டில் உள்ள அனைவரும் அந்த துறையை சேர்ந்தவர்கள் என்பதில் உண்மையில்லை இவ்வாறு பேசியிருக்கிறார் ஃபர்கான் அக்தர்.

    View this post on Instagram

    Gone too soon.

    A post shared by Farhan Akhtar (@faroutakhtar) on

    முதலைகள் அழட்டும்

    சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்த போது கூட, தூங்கு என் தம்பியே தூங்கு.. கழுகுகள் கூடட்டும் முதலைகள் அழட்டும், சர்க்கஸ் கலைஞர்கள் ஏமாற்று வித்தை காட்டட்டும், மனிதர்களின் இதயங்களில் இருள் ஆழமடையட்டும். என் தம்பியே தூங்கு என உருக்கமான ஒரு இரங்கற்பாவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார் ஃபர்கான் அக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor and filmaker Farhan Akhtar talks abot Sushnth singh Rajput. He says Sushant death is one of the greatest tragedies of recent times.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X