Farhana: ஃபர்ஹனா படத்திற்கு கிளம்பியது எதிர்ப்பு... காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு

சென்னை: நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள ஃபர்ஹானா திரைப்படம் இன்று (மே 12) வெளியானது.

ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இந்நிலையில், ஃபர்ஹனா படத்தை தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
ஃபர்ஹனா படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியதால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

 Farhana: It is reported that the screening of Farhana film has been canceled in Tiruvarur

ஃபர்ஹானா காட்சிகள் ரத்து:ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஃபர்ஹானா திரைப்படம் இன்று (மே 12) வெளியானது. நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஃபர்ஹானா என்ற முஸ்லிம் பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லரில் சில காட்சிகள் இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது.

இதனால், ஃபர்ஹானா படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கைகள் வைத்தன. இதன் காரணமாக ஃபர்ஹானா திரைப்படம் சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், ஃபர்ஹானா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. ஆனாலும், இந்தப் படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தன.

இந்நிலையில், திருவாரூரில் ஃபர்ஹானா படத்தை வெளியிட எதிர்ப்புத் தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். இதனால், ஃபர்ஹானா படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவாரூரில் ஒரு திரையரங்கில் தான் இந்தப் படம் வெளியானது. தற்போது அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 Farhana: It is reported that the screening of Farhana film has been canceled in Tiruvarur

சமீபத்தில் வெளியான புர்கா, தி கேரளா ஸ்டோரி படங்களுக்கும் இஸ்லாமியர்களிடையே கடும் எதிர்ப்பு காணப்பட்டது. முன்னதாக ஃபர்ஹனா திரைப்படம் எந்த மதத்துக்கும் எதிரான கருத்துகளை வெளிப்படுத்தாது என அறிக்கை வெளியிட்டிருந்தது. அரசால் முறையாக தணிக்கைச் செய்யப்பட்டு வெளியாக உள்ள ஃபர்ஹானா திரைப்படம் குறித்து ஒருசிலர் உருவாக்கும் சர்ச்சைகள் வேதனையைத் தருகிறது. ஃபர்ஹானா திரைப்படம் எந்த மதத்திற்கும் உணர்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் எதிராகவோ புண்படுத்தும் விதமாகவோ செயல்படுவது அல்ல என விளக்கம் கொடுத்திருந்தது.

அதேபோல், ஃபர்ஹானா படத்தில் எவ்விதமான சர்ச்சையான காட்சிகளும் இல்லையென எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனும் விளக்கம் கொடுத்திருந்தார். கேரளா ஸ்டோரிஸ் போன்ற மோசமான நோக்கம் உடைய படத்தோடு ஃபர்ஹானாவை இணைத்து பேசுவது தவறான புரிதலின் அடிப்படையில் எழுந்த விபத்து எனவும் அவர் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X