இவரு திரிஷா, நயன்தாராவுக்கே ஃபேவரைட்டாம்.. பிக் பாஸ் வீட்டுக்குப் போக போகும் அந்த ஹாட் பாய் யாரு?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெறும் நடிகர்கள் மட்டுமே கலந்து கொள்ளாமல், மற்ற கலைத்துறையை சார்ந்த பிரபலங்களும் பங்கேற்பது வழக்கம்.
இந்த ஆண்டு தொடங்கவுள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் அப்படி கலந்து கொள்ளப் போகும் ஒரு ஹாட்டான நபர் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன.
நடிகைகள் திரிஷா, நயன்தாராவுக்கே ஸ்டைலிஷ்ட்டாக பணிபுரிந்த ஃபேஷன் ஸ்டைலிஷ்ட் கருண் ராமன் தான் அந்த போட்டியாளர்.

பரவும் தகவல்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தினம் தோறும் ஏகப்பட்ட தகவல்கள் பரவி வருகின்றன. அதில் எது உண்மை? எது பொய் என்பது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் வரை யாருக்குமே தெரியாது. சம்பந்தப்பட்ட போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு மட்டுமே அது தெரியும். ஆனால், சில ரகசிய தகவல்கள் அவ்வப்போது கசிவது வழக்கம். அப்படி பரவும் தகவல்கள் தான் பிக் பாஸ் ரசிகர்களை அந்த நிகழ்ச்சி எப்போ ஆரம்பிக்கும் என்ற ஆர்வத்தையும் தூண்டுகிறது.

அப்படி தெரிந்த பெயர்கள்
அப்படி தெரிந்த பெயர்களில், ஷாலு ஷம்மு, லக்ஷ்மி மேனன், ரியோ ராஜ், அமுதவாணன், ஷிவானி நாராயணன், கிரண், உள்ளிட்ட சிலர் கன்ஃபார்ம் போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அந்த லிஸ்டில் இப்போ ஒரு இளம் ஃபேஷன் ஸ்டைலிஸ்ட் பெயரும் அடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த கருண் ராமன்
மாடலிங் பெண்கள் மற்றும் பிரபல நடிகைகளின் ஹாட் ஃபேவரைட்டான கருண் ராமன் தான் பிக் பாஸ் இல்லத்துக்குள் வரப் போகும் அந்த போட்டியாளராம். ஃபேஷன் கொரியோகிராஃபராகவும் பிரபலங்களின் ஸ்டைலிஸ்ட்டாகவும் பணி புரிந்து வருகிறார் கருண் ராமன். ஓரினச் சேர்க்கை குறித்த விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறார்.

அப்போ கலக்கல் தான்
சர்ச்சைகளை கிளப்பும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இப்படியொரு ஹாட் கன்டஸ்ட்டண்ட் களமிறங்குகிறார் என்றால் அப்போ நிச்சயம் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் களை கட்டத் தான் போகிறது. சமூகத்திற்கு ஓரினச்சேர்க்கை குறித்த விழிப்புணர்வு கருத்துக்களையும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொண்டு இவர் எடுத்துக் கூறுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!
Recommended Video

ஆர்யாவுடன் ரியாலிட்டி ஷோ
ரியாலிட்டி ஷோ என்பது கருண் ராமனுக்கு ஒன்றும் புதிது கிடையாது. ஏற்கனவே கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை ரியாலிட்டி ஷோவை நடிகர் ஆர்யாவுடன் இணைந்து வழங்கி உள்ளார் இவர். பெண்களை கவர்வதில் இவர் செம கில்லாடி என்பதால், இந்த ஆண்டு பிக் பாஸ் சீசனில் இவர் ஒரு செம டஃப் போட்டியை மற்றவர்களுக்கு கொடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











