மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா தவெகவில் இணைந்தார்

சென்னை: தமிழக அரசியல் களம் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்க, சினிமா மற்றும் ஃபேஷன் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் தங்களை அரசியல் கட்சிகளில் இணைத்துக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

கட்சியில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜாய் கிரிஸில்டா, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது தனக்கு மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தமிழகத்தில் புதிய அரசு இப்போதுதான் பொறுப்பேற்றுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்று 10 நாட்களுக்குள் உடனடியாகப் பெரிய மாற்றங்களை நாம் எதிர்பார்த்துவிட முடியாது. முதல்வர் அவர்களுக்கு நாம் போதிய அவகாசம் கொடுக்க வேண்டும். தற்போதைய அரசு சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. அவர்கள் மக்களுக்கு நிச்சயம் பல நன்மைகளைச் செய்வார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று ஜாய் கிரிஸில்டா செய்தியாளர்களிடம் பேசினார்.

Joy Christina TVK pu

மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம்: நீ தமிழக வெற்றிக் கழகத்தில் ஜாய் கிரிஸிஸ்டா இணைந்துள்ள இந்தச் சூழலில், அவருக்கும் பிரபல சமையல் கலை நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கும் இடையே நிலவி வரும் நீதிமன்ற வழக்கு விபரமும் தற்போது மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றியதாக ஜாய் கிரிஸில்டா ஏற்கனவே பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு தங்களுடைய திருமணம் நடைபெற்றதாகவும், அதற்கான அத்தனை ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தான் கர்ப்பமாக இருந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் தனியாக விட்டுவிட்டு விலகிச் சென்றதாகக் கூறி, சென்னை காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் மாநில மகளிர் ஆணையத்திலும் ஜாய் கிறிஸ்டினா புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாகப் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

ஜூன் 8 விசாரணை: இந்த விவகாரம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், குழந்தையின் தந்தை யார் என்பதைக் கண்டறிய நீதிமன்ற உத்தரவின்படி டி.என்.ஏ (DNA) பரிசோதனை நடத்தப்பட்டது. அந்தப் பரிசோதனையின் முடிவில், குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இரு தரப்பும் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருமணச் சிக்கல் மற்றும் குழந்தை தொடர்பான சிவில் வழக்கு, வரும் ஜூன் 8 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X