“தெய்வம் நின்று கொல்லும்“.. மாதம்பட்டி ரங்கராஜை விடாமல் துரத்தும் ஜாய் கிரிஸில்டா!

சென்னை: பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா போலீஸில் புகார் அளித்தது மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் தொடர்ச்சியாக மாதம்பட்டி ரங்கராஜை விமர்சித்து பதிவுகளை போட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மாதம்பட்டி ரங்கராஜை காணவில்லை என பதிவினை போட்டுள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ் கடந்த 2023 ஆம் ஆண்டு தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், தான் கருவுற்ற நிலையில், தன்னிடமிருந்து விலகியதாக ஜாய் கிரிசில்டாமகளிர் ஆணையத்திலும் புகாராக அளித்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் இரண்டு முறை விசாரணை நடத்தப்பட்டது. அதில், விசாரணை முடிந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிறிஸ்டில்லாவை திருமணம் செய்து கொண்டதாக ஒப்புக்கொண்டதாகவும், குழந்தை தன்னுடையது தான் என ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது.

மாதம்பட்டி ரங்கராஜ்: இதை திட்டவட்டமாக மறுத்த மாதம்பட்டி ரங்கராஜ், நான் ஜாயை தன்னிச்சையாக திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை, குழந்தைக்கு DNA test எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். ஆனால், அந்த அறிக்கை வெளியாகி ஒருமாதத்திற்கு மேலான போதும், மாதம்பட்டி இதுவரை டெஸ்ட் எடுக்க வரவில்லை என பல முறை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ராகா ரங்கராஜின் அப்பா மாதம்பட்டி ரங்கராஜை கடந்த ஒரு மாதமாக காணவில்லை.

Madhampatty Rangaraj Joy Crizildaa
Photo Credit:
காணவில்லை: DNA test எடுக்க சொன்னவர் இப்போது தலைமறைவாக உள்ளார். இவரை ஈவண்டில் யாராவது பார்த்தால் உடனே எனக்கு DM செய்யவும். குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குமாம், அதான் ஓளிந்து ஓடுகிறார். ப்ரூப் பண்ணிவிட்டால், சார் மாடிப்பர்ர் என பயப்படுகிறார். ஒருவேலை பணம் குடுத்து DNA test correct பண்ண time எடுக்கிறார் போல? நீங்க தான், எல்லாத்தையுமே லீகலா பேஸ் பண்ணுற ஆள் ஆச்சே, இதை மட்டும் ஏன் உங்களால் லீகலா பேஸ் பண்ண முடியவில்லை? அன்பு கணவர் மாதம்பட்டி ராங்கராஜ், என்னை நீங்கள் ஏமாற்றலாம், ஊரை நீங்கள் ஏமாற்றலாம், சுற்றி இருக்கிறவர்கல ஏமாற்றலாம் ஆனால் உங்கள் மனசாட்சியையும் கடவுளையும் நீங்கள் ஏமாற்ற முடியாது. கர்மா என்று ஒன்று இருக்கிறது. "அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்" செய்த செயல்களுக்கான பலனை நிச்சயம் நீங்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X