மாதம்பட்டி ரங்கராஜ் எந்த லெவலுக்கும் போவாரு.. எங்க உயிருக்கு ஆபத்து இருக்கு.. ஜாய் கிரிஸில்டா பேட்டி

சென்னை: ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜூக்கும் கடந்த
2023 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாகவும், தான் கருவுற்ற நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னிடமிருந்து விலகிவிட்டதாக குற்றம் சாசட்டி இருந்தார். இது தொடர்பாக, ஜாய், மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்து இருக்கும் நிலையில், அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு இடையே கடந்த மாதம் ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் ஜாய் கிரிசில்டா தனது மகன் ராகா ரங்கராஜ் பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை தொடங்கினார். இந்த கணக்கை மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு அழிக்க முயற்சிப்பதாக ஜாய் கிரிஸில்டா குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து சென்னையில் பேட்டியளித்த ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ராகா ரங்கராஜ் என்ற பெயரில் instagram கணக்கு ஒன்றை தொடங்கியிருந்தேன். அதை மாதம்பட்டி தரப்பினர் அழிக்க பார்க்கிறார்கள். இது தொடர்பாக ரங்கராஜ் மீது சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்க இருக்கிறேன். இதுவரை குழந்தை குறித்து அவர் எந்தவிதமான பதிலையும் தெரிவிக்காமல் ஓடி ஒளிந்து கொண்டு இருக்கிறார். எத்தனை நாளைக்கு தான் அவர் ஓடிக்கொண்டே இருப்பார். என்றாவது ஒருநாள் இந்த பிரச்சனைக்கு அவர் வாய் திறந்து பதில் அளித்து தானே ஆக வேண்டும்.

Madhampatty Rangaraj Joy Crizildaa Pressmeet
Photo Credit:

ஜாய் கிரிஸில்டா பேட்டி: டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என அவர் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கை விட்டு ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. நானும் இன்ஸ்டாகிராம் மூலமாக டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க தயார் என்று சொல்லிவிட்டேன். ஆனால், அவர், டி.என்.ஏடெஸ்ட் எடுப்பதற்கு முன்வரவில்லை. அவர் மீது தவறு இல்லை என்றால் டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு வர வேண்டியதுதானே எதற்காக ஓடி ஒளிந்து கொண்டு இருக்கிறார். அவருக்கே நன்றாக தெரியும், இது அவருடைய குழந்தை தான் என்று என்று, டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால், மாட்டிக் கொள்வோம் என்கிற பயத்தில் தான் அதுபற்றி எதுவும் பேசாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார். ஆனால், என்றாவது ஒரு நாள் அந்த குழந்தைக்கு பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.

உயிருக்கு ஆபத்து: எனக்கும் என்னுடைய குழந்தைக்கும் எது நடந்தாலும் அதற்கு ரங்கராஜ் தான் காரணம். அவர் எந்த எல்லைக்கும் செல்வதற்கு தயாராக இருக்கிறார். அவரிடம் பணம் பலம் இருக்கிறது. என்னுடைய நம்பரை பலரிடம் கொடுத்து என்னை மிரட்டுகிறார். இது தொடர்பாகவும் நான் சைபர் கிரைமில் புகார் அளிக்க இருக்கிறேன். மகளிர் ஆணையத்தில் பேசிவிட்டு வெளியில் வந்து, வேறுவிதமாக அறிக்கை வெளியிடுகிறார். இப்பவும் நான் டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பதற்காக தயாராக இருக்கிறேன் அவர் தான் முன் வரவேண்டும். மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு இருக்கும் பண பலத்தை வைத்து அனைத்தையும் அழித்து விடலாம் என நினைக்கிறார். என்னுடைய குழந்தைக்கு நியாயம் கிடைக்கும் வரை நான் போராடிக் கொண்டு தான் இருப்பேன் என்று ஜாய் கிரிஸில்டா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X