ராக் இல்லை.. ஜான் சினாவுடன் மோதுகிறார் வின் டீசல்.. பறக்கும் கார்களுடன் தெறிக்கும் F9 டிரைலர்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9ம் பாகத்தின் அதிரடியான டிரைலர் உலகம் முழுவதும் ரிலீசாகி டிரெண்டாகி வருகிறது.
ஜஸ்டின் லின் இயக்கத்தில் 9ம் பாகத்திலும் தனது அதிரடி ஆக்ஷனில் கலக்குகிறார் ஹீரோ வின் டீசல்.
இந்த படத்தில் டுவைன் (ராக்) ஜான்சன் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக மற்றொரு WWE வீரரான ஜான் சினா வில்லனாக நடித்து அசத்தியுள்ளார்.

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்
Fast and Furious படங்கள் என்றாலே பறக்கும் கார் சீன்களும், அபாரமான கார் சேஸிங் மற்றும் சண்டை காட்சிகள் நிறைந்திருக்கும். ஒரு நிமிடமும் ரசிகர்களை போர் அடிக்க விடாமல் காட்சிக்கு காட்சி பிரம்மாண்டங்களை காட்டி மிரள வைக்கும். முதல் பாகத்தில் இருந்தே வின் டீசலுடன் பயணித்த பால் வாக்கர், 7ம் பாகம் ரிலீசாவதற்கு முன் விபத்தில் இறந்துவிட்டார். அதன் பின்னரும் Fast and Furious படம் தனது வீரியம் குறையாமல் வெளியாகி வருகிறது.
தெறிக்கும் டிரைலர்
இந்நிலையில், 9ம் பாகமான F9 டிரைலர் ரிலீசாகி உள்ளது. உலகளவில் Fast and Furious படத்துக்கான ரசிகர்கள் அதிகம் உள்ளதால், இந்த டிரைலர் குறைந்த நேரத்திலேயே வைரலாகி வருகிறது. இதுவரை வெளியான 8 பாகங்களை விட அடுத்த லெவலில் இந்த பாகம் இருக்குமா? என நினைத்த ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் டிரைலர் தெறியாக இருக்கிறது.

ஃபேமிலி மேன்
ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9ம் பாகத்தின் டிரைலர் ரிலீசாவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக டிரைலர் டீசர் வெளியானது. அதில், டொமினிக் டொரட்டோ தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பேசுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது. டோமினிக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நாயகன் வின் டீசல் நாயகிக்கு அணிவித்த சிலுவை செயினை தனது மகனுக்கு நாயகி அணிவிக்கும் விதமாக அந்த டீசர் இருந்தது.

ராக் இல்லை
ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படங்களின் ஒவ்வொரு பாகங்களிலும் புதிய புதிய கதாபாத்திரங்களையும் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களையும் இணைத்துக் கொண்டே செல்வார்கள். Fast and Furious 5ம் பாகத்தில் இருந்து ஹாப்ஸ் கதாபாத்திரத்தில் அறிமுகமான டுவைன் ஜான்சன் F9 படத்தில் இடம்பெறவில்லை. கடந்த ஆண்டு வெளியான ஸ்பின் ஹாஃப் படமான ஹாப்ஸ் அண்ட் ஷா படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
யார் வில்லன்
பெரிய கதாபாத்திரமான ராக் இந்த பாகத்தில் இடம்பெறாத நிலையில், தற்போது வின் டீசலுக்கு நிகராக சண்டை யிடும் வில்லனாக மற்றொரு WWE சாம்பியன் ஜான் சினா இந்த படத்தில் நடித்துள்ளார். வின் டீசலின் கதாபாத்திரமான டோமினிக் டொரட்டோவின் தம்பி கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்துள்ள ஜான் சினா, அவருக்கு வில்லனாக மிரட்டி இருக்கிறார்.
பறக்கும் கார்கள்
கார் ரேஸ் பிரியர்களின் படமாகவும் ஆக்ஷன் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் ஆகவும் இருக்கும் Fast Furious 9ம் பாகத்தில் கார்கள் மலைகளை தாண்டி பறக்கின்றன. அதிலும், டிரைலர் இறுதியில் வரும் கயிற்றில் கட்டியபடி கார் ஸ்விங்காகும் காட்சி இந்த முறையும் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் ரசிகர்களுக்கு செம்ம விருந்து இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
டிரெண்டிங்
ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9ம் பாகத்தின் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில், இந்தியாவிலும் #Fast9, #FastAndFurious9 என்ற ஹாஷ்டேக்குகளை இந்திய ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். வின் டீசல் மற்றும் ஜான் சினா சண்டை இடும் காட்சிகள் மற்றும் பறக்கும் கார்களின் சாகச காட்சிகளை பதிவிட்டு ரசிகர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











