Fast X Review: அடியாத்தி.. எத்தனை ஹீரோ.. எத்தனை ஹீரோயின்.. ஃபாஸ்ட் எக்ஸ் ட்விட்டர் விமர்சனம் இதோ!

லாஸ் ஏஞ்சல்ஸ்: வின் டீசல் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ஃபாஸ்ட் எக்ஸ் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இதுவரை வெளியான 9 பாகங்களும் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்திய நிலையில், இந்த பாகத்தில் ஏகப்பட்ட ஹீரோக்களும் ஹீரோயின்களும் நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கின்றனர்.
i
வின் டீசல் மற்றூம் மறைந்த நடிகர் பால் வாக்கர் இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 7 பாகங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தனர். 7ம் பாகம் வெளியாகும் முன்னரே கார் விபத்தில் பால் வாக்கர் இறந்து விட்டார்.

 Fast X Twitter Review and Reactions are here

ஃபாஸ்ட் 8, ஃபாஸ்ட் 9 என பால் வாக்கர் இல்லாமல் வெளியான இந்த சீரிஸ் தற்போது 10வது பாகமாக உருவாகி உள்ளது.

ஃபாஸ்ட் எக்ஸ் எப்படி இருக்கு?: கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஆக்வாமேன் படங்களில் நடித்த ஜேசன் மோமோவா தான் இந்த படத்தில் வில்லன். வின் டீசல் 10வது பாகத்திலும் டாம் டொரேட்டோவாக தொடர்கிறார். மனுஷன் எப்படித்தான் இந்த வயதிலும் முதல் பாகத்தில் பார்த்த எனர்ஜி மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கிறார் என்பது தான் தெரியவே இல்லை. டாமின் குடும்பத்தையே அழிக்க ஜேசன் மோமோவா பைத்தியம் பிடித்த மிருகம் போல வேட்டையாட தொடங்க தனது குடும்பத்தை டாம் எப்படி காப்பாற்றினார் என்பது தான் இந்த படத்தின் கதை என்கின்றனர்.

எத்தனை ஹீரோ: வின் டீசல் லீடு ரோலில் நடித்துள்ள இந்த படத்தில் ஏற்கனவே நட்சத்திர பட்டாளம் அதிகம் தான். இந்நிலையில், கடந்த பாகத்தில் வில்லனாக நடித்த ஜான்சினா இந்த படத்தில் வின் டீசலின் தம்பியாக அவரது கட்சியில் மாறி உள்ளார். வில்லனாக ஜேசன் மோமோவா நடித்துள்ளார். மேலும், ஜேசன் ஸ்டேதம் மற்றும் பலர் உள்ளனர். சில சர்ப்ரைஸ் என்ட்ரிக்களும் உள்ளன.

இத்தனை ஹீரோயின்களா?: வொண்டர் உமன் கால் கடோட் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் ஆரம்பத்தில் நடித்திருப்பார். அவர் இந்த பாகத்தில் ரிட்டர்ன் ஆகி உள்ளார். கேப்டன் மார்வெல் பட நடிகை பிரை லார்சன், டாம் மனைவியாக பல பாகங்களில் நடித்துள்ள மிட்செல் ரோட்ரிகோஸ் என ஹீரோயின் லிஸ்ட்டும் இந்த படத்தில் பெரிதாகி உள்ளது.

8, 9 பாகங்களை விட சூப்பர்: 9ம் பாகம் ரசிகர்களுக்கு சுத்தமாகவே பிடிக்காத நிலையில், படம் சொதப்பியது. அந்த படத்தை இயக்கிய ஜஸ்டின் லின்னை தூக்கி அடித்து விட்டு இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு லூயிஸ் லெட்டரியருக்கு கிடைத்த நிலையில், மனுஷன் பிரித்து மேய்ந்துள்ளார் என்றே ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 8 மற்றும் 9 பாகங்களை இந்த பத்தாவது பாகத்தின் முதல் பாதியே தூக்கி சாப்பிட்டு விட்டதாக இந்த ரசிகர் கமெண்ட் போட்டுள்ளார்.

 Fast X Twitter Review and Reactions are here

வொண்டர் உமன் வந்துட்டாங்க: ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 6ம் பாகத்தில் கடைசியாக வொண்டர் உமன் நடிகை கால் கடோட்டை ஃபாஸ்ட் சீரிஸ் படத்தில் பார்த்தது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து ஃபாஸ்ட் எக்ஸ் படத்தில் ஜிசல் கதாபாத்திரம் மீண்டும் வந்துள்ளது என ஈஸ்டர் எக்கை ரசிகர்கள் அம்பலப்படுத்தி உள்ளனர்.

 Fast X Twitter Review and Reactions are here

ஜான்சினா ட்வீட்: ஃபாஸ்ட் எக்ஸ் படத்தில் மிரட்டல் ஸ்டன்ட் காட்சிகளில் நடித்துள்ள நடிகர் ஜான்சினா தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபாஸ்ட் எக்ஸ் படத்தின் ரிலீஸை முன்னிட்டு அந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளை பதிவிட்டு ரசிகர்களை தியேட்டருக்கு வந்து படத்தை பார்க்க சொல்லி உள்ளார்.

பிரை லார்சனுக்காகவே பார்க்கலாம்: கேப்டன் மார்வெல் படத்தில் லீடு ரோலில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகை பிரை லார்சன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி உள்ளார். அவருக்காகவே இந்த படத்தை பார்க்கலாம் என ரசிகர்கள் ஃபாஸ்ட் எக்ஸ் ப்ரீமியருக்கு கவர்ச்சி உடையில் வந்த அவரது புகைப்படங்களை பதிவிட்டு கமெண்ட் போட்டு வருகின்றனர்.

 Fast X Twitter Review and Reactions are here

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X