1000 Crore Movies: ஆயிரம் கோடிகளை அதிவேகமாக வசூலித்த படங்கள் லிஸ்ட்.. ஷாருக்கானுக்கே கடைசி இடம்தான்

சென்னை: இந்திய சினிமா உலகில் எப்போது படத்தின் வசூலை மையமாகக் கொண்டு ஒரு படத்தின் வெற்றி தீர்மானிக்கப்பட்டதோ, அப்போது முதல் திரையுலகில் போட்டி அதிகரித்துவிட்டது. மேலும் வசூலை மையப்படுத்தி வெற்றி என்ற பின்னர், குறிப்பிட்ட ரீஜினில் ஆடியன்ஸை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படங்கள் வசூல் ரீதியாக சில மாநிலங்களில் வெற்றிப் படமாக மாறிவிட்டாலே, அதனை பான் இந்தியா படம் என அறிவித்து, வெற்றிவிழாவும் கொண்டாடி விடுகின்றனர்.

இப்படியான நிலையில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன புஷ்பா 2 திரைப்படம் இந்தியாவில் திரையிடப்பட்ட அனைத்து மாநிலங்களிலும் நல்ல வசூலைக் குவித்து வெற்றி மழையில் உள்ளது. படம் 6 நாட்களில் ரூபாய் 1,000 கோடிகளை வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், அதிவேகமாக ரூபாய் 1,000 கோடிகளை வசூல் செய்த படங்களின் பட்டியலை இந்தத் தொகுப்பில் காணலாம்.

pushpa 2 allu arjun 2

புஷ்பா 2 படத்தைப் பொறுத்தவரையில், படம் ரிலீஸ்க்கு முன்னரே ரூபாய் ஆயிரம் கோடிகளுக்கு மேல் பிசினஸ் செய்தது. இதுமட்டும் இல்லாமல், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது தனி எதிர்பார்ப்பு இருந்ததால், திரையிட்ட இடங்களில் எல்லாம் ஹவிஸ் புல் காட்சிகளாகத்தான் ஓடியது. இப்படியான நிலையில் புஷ்பா 2 வெளியான 6 நாளில் ரூபாய் 1,000 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. இந்தியத் திரையுலகில் ஒரு படம் 6 நாட்களில் ரூபாய் 1,000 கோடிகளை வசூல் செய்துள்ளது என்றால் அது, புஷ்பா 2 படம்தான்.

pushpa 2 allu arjun 2

1,000 கோடி வசூல்: மேலும் படத்தின் முதல் நாள் வசூலே ரூபாய் 294 கோடிகளை எட்டியது. இப்படியான நிலையில், இந்த முதல் நாள் வசூல் என்பதை, மிகப்பெரிய திரையுலகம் எனப்படும் இந்தித் திரையுலகில்கூட எந்தப் படமும் வசூல் செய்யவில்லை. தென்னிந்திய சினிமா அதுவும் தெலுங்கு சினிமா இந்தச் சாதனையைப் படைத்து ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் தெலுங்கு சினிமாவை நோக்கி பார்வையைத் திருப்பவைத்துள்ளது.

pushpa 2 allu arjun 2

ராஜமௌலி: அதன் பின்னர் எடுத்துக் கொண்டால், மற்றொரு தெலுங்குப் படம் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதாவது பாகுபலி 2 படம் 10 நாட்களில் ரூபாய் 1,000 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. மூன்றாவது இடத்திலும் தெலுங்கு படமான ஆர்.ஆர்.ஆர். படம் உள்ளது. ஆர்.ஆர்.ஆர் படம் 16 நாட்களில் ரூபாய் ஆயிரம் கோடிகளை வசூல் செய்தது. பாகுபலி 2 படத்தினையும், ஆர்.ஆர்.ஆர். படத்தினையும் இயக்குநர் ராஜமௌலி இயக்கியுள்ளார். நான்காவது இடத்தில் கன்னட திரையுலகைச் சேர்ந்த படமான கே.ஜி.எஃப் 2 படமுள்ளது. இந்தப் படத்தினை பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இந்தப் படமும் 16 நாட்களில் ரூபாய் 1,000 கோடிகளை அள்ளியது.

pushpa 2 allu arjun 2

ஷாரூக்கான்: 5வது மற்றும் 6வது இடத்தில் ஷாரூக்கானின் ஜவான் மற்றும் பதான் படங்கள் உள்ளன. இதில் ஜவான் படம், அட்லீ இயக்கத்தில் உருவான முதல் பாலிவுட் படம். இந்தப் படம் 18 நாட்களில் ரூபாய் 1,000 கோடிகளை வசூல் செய்தது. ஜவான் படத்திற்குப் பின்னர் வந்த பதான் படம் 27 நாட்களில் ரூபாய் ஆயிரம் கோடிகளை அள்ளியது. அதிவேகமாக ரூபாய் 1,000 கோடிகளை அள்ளிய படங்கள் இவைதான்.

pushpa 2 allu arjun 2

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X