தல வந்தா தள்ளிதான் போகனும்.. விடாமுயற்சி தோற்றுவிட்டதுனு சொன்னா பைத்தியக்காரத்தனம் - ஃபேட் மேன் ரவி
சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடித்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன படம் டிராகன். அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான இந்த படம், பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதுவரை படம் 50 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது. மேலும் படம் இந்த வார இறுதிக்குள் எப்படியும் 100 கோடிகளை அசால்ட்டாக வசூல் செய்துவிடும். இதனால் படத்தை தயாரித்து ரிலீஸ் செய்த ஏ.ஜி. எஸ் நிறுவனம் செம ஹேப்பியாக உள்ளது. இந்நிலையில் படம் குறித்து படத்தில் நடித்த ஃபேட் மேன் ரவீந்திரன் அளித்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், மரியம் ஜார்ஜ், விஜே சித்து, ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் பின்னணி இசை என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரதீப் ரங்கநாதன் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக அவரது முதல் படமான கோமாளி படமும் ஹிட், இரண்டாவது படத்தில் தானே இயக்கி நடித்த லவ் டுடே படமும் ஹிட். இப்போது அவரது நடிப்பில் வெளியாகியுள்ள டிராகன் படமும் ஹிட் அடித்துள்ளது.

இப்படி இருக்கும்போது, படம் ரிலீஸ்க்கு முன்னர், டிராகன் படம் அஜித்தின் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆன பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த தேதியில் அஜித்தின் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டதால், டிராகன் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பாக பேட்டி ஒன்றில் கேள்வி கேட்டபோது, பிரதீப் ரங்கநாதன் அளித்த பதில் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதாவது, " தல வந்தா தள்ளிப் போய் தான் ஆகனும்" என்றார், செம கூலாக.
பிரதீப்: இவரது பதில் அஜித் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தில் நடித்த ஃபேட் மேன் ரவீந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி பலரது கவனிப்பை பெற்றுள்ளது. அதாவது அந்த பேட்டியில், பிரதீப் ரங்கநாதன் இன்றைக்கு சினிமாவில் சாதிக்க ஆசைப்படுகிற, கனவு காண்கிற ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நம்பிக்கையானவராக உள்ளார். இது மட்டும் இல்லாமல்,

பிராண்ட்: ஒரு நல்ல படத்தை எடுத்துள்ளவர்கள் என்ன மாதிரியான மன நிலையில் இருக்க வேண்டும் என்றால், விடாமுயற்சி என்ற டைட்டிலுக்கு பின்னால் உள்ள மனிதன், இன்றைக்கு பிரதீப் ரங்கநாதன் அடைந்துள்ள உச்சத்தை, கடந்த 25, 30 ஆண்டுகளாக தக்க வைத்துக் கொண்டு வந்துள்ளார். அஜித் குமார் ஒரு பிராண்ட். ஒதுங்கிப் போனது என்பது அந்த பிராண்ட்க்குத்தான். அதை பயந்து விலகினார்கள் என மற்றவர்கள் எழுதினாலும் தவறு. அதேபோல் பிரதீப் சொன்னதைப் போல், தல வந்தா தள்ளி தான் போகனும் எனக் கூறியது சரிதான்.

ஒப்பீடு: ஒருவேளை இரண்டு படங்களும் ஒன்றாக ரிலீஸ் ஆகி, விடாமுயற்சி தோல்வி அடைந்துவிட்டால், டிராகன் வெற்றிப் படமாகியிருந்தால், அதை ஒப்பிட்டு பேசுவது பைத்தியக்காரத்தனம். ஏனென்றால், விடாமுயற்சி படத்தை கையாள்வது என்பது, டிராகன் படத்தை கையாளுவதை விட 5 மடங்கு பெரியவிஷயம்" என பேசியுள்ளார். இவரது பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











