“சேர்ந்து நடிக்குறத பத்தி இனி அப்பா தான் முடிவு எடுக்கணும்”: மெகா ஸ்டாரோட பையனே இப்படி சொல்லிட்டார்

சென்னை: துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'சீதா ராமம்' படத்தின் தமிழ் ட்ரெய்லர் நேற்று வெளியானது. .

சென்னையில் நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் தனது தந்தை மம்மூட்டியுடன் நடிப்பது குறித்து மனம் திறந்துள்ளார் துல்கர் சல்மான்.

துல்கர் சல்மானின் விருப்பம் நிறைவேறுமா என இருவரது ரசிகர்களும் ரொம்பவே எதிர்பார்ப்பில் உள்ளனர்.

வாரிசு

வாரிசு

மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான் மலையாளத்தி.ல் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். தமிழிலும் 'ஓகே கண்மனி', 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்', 'ஹேய் சினாமிகா' போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இப்போது தெலுங்கில் துல்கர் சல்மான் நடித்துள்ள 'சீதா ராமம்' திரைப்படம் தமிழ், மலையாள மொழிகளிலும் வெளியாகிறது.

ராணுவ வீரர்

ராணுவ வீரர்

ஹனு ராகவபுடி இயக்கியுள்ள சீதா ராமம் படத்தில், துல்கர் சல்மான் ராணுவ வீரர் பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். துல்கர் சல்மான் ராணுவ வீரர் கேரக்டரில் நடித்திருந்தாலும், அவருக்கு அதிரடியான ஆக்சன் காட்சிகள் இல்லை எனவும், வழக்கம்போல் லவ்லியான ரொமாண்டிக் ஹீரோவாக தோன்றுவார் என்றும் தெரிகிறது.

ட்ரெய்லர் ரிலீஸ்

ட்ரெய்லர் ரிலீஸ்

'சீதா ராமம்' சூட்டிங் தொடங்கப்பட்டதில் இருந்தே, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக காணப்பட்டன. 'சீதா ராமம்' படத்தின் பாடல்கள், டீசர் அனைவரிடமும் கவனம் ஈர்த்த நிலையில், தற்போது ட்ரெய்லருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஐதராபாத்தில் தெலுங்கு ட்ரெய்லர் வெளியீட்டிலும், சென்னையில் தமிழ் ட்ரெய்லர் வெளியீட்டிலும் படக்குழுவினருடன் துல்கர் சல்மானும் பங்கேற்றார்.

காதல் படங்களுக்கு நோ

காதல் படங்களுக்கு நோ

ஐதராபாத்தில் நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய துல்கர் சல்மான், "தான் காதல் படங்களில் மட்டுமே நடிப்பதாகத் தொடர்ந்து விமர்சனங்கள் வருகின்றன. ஒவ்வொரு முறையும் காதல் படங்களில் கமிட் ஆகக் கூடாதென்று நினைப்பேன். ஆனால், சீதா ராமம் படத்தின் கதையை இயக்குநர் ஹனு ராகவபுடி சொன்னதும், இந்தப் படத்தில் நடிக்காமல் இருக்க முடியவில்லை" எனத் தெரிவித்தார். மேலும், இனிமேல் காதல் படங்களில் நடிக்க மாட்டேன் எனவும் கூறியிருந்தார்.

அப்பாவுடன் கூட்டணி

அப்பாவுடன் கூட்டணி

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற 'சீதா ராமம்' படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியீட்டிலும், துல்கர் சல்மான் பேசியது வைரலாகி வருகிறது. இதில், அவரது அப்பா மம்மூட்டியுடன் சேர்ந்து நடிப்பது குறித்து துல்கர் சல்மானிடம் கேள்வியெழுப்பட்டது. அதற்கு பதிலளித்த துல்கர், "எனக்கு அப்பாவுடன் சேர்ந்து நடிக்க விருப்பம் தான், நானே இதுபத்தி என் தந்தை மம்மூட்டியிடம் பலமுறை கேட்டுவிட்டேன். ஆனாலும், அவர் தான் இன்னும் பதில் கூறவில்லை, நானும் அவரது முடிவுக்காக காத்திருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சில வருடங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மம்மூட்டியிடம், "துல்கருடன் சேர்ந்து நடிப்பீங்களா" என மிர்ச்சி சிவா கேள்வி கேட்டிருந்தார். அதுக்கு பதிலளித்த மம்மூட்டி, "என்னுடன் சேர்ந்து நடிக்க, துல்கருக்கு விருப்பமான்னு தெரியலையே, இத அவர்கிட்ட தான் கேட்கணும்" எனக் கூறியிருந்தார். தற்போது துல்கர் சல்மானும் மம்மூட்டியுடன் சேர்ந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளது, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X