தந்தையர் தினம்.. உயிர் கொடுத்த தந்தைக்கு வாழ்த்து சொல்லும் திரைப்பிரபலங்கள் !
சென்னை : 1972 ஆம் ஆண்டு முதல் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளில் பல முன்னணி திரைப்பிரபலங்களும் தங்களது தந்தைக்கு வாழ்த்துக்கூறி புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

தந்தையர் தினம்
உயிர் கொடுத்தவர் அன்னை என்றால் உலகை அறிமுகப்படுத்தியவர் தந்தை. குடும்பம் என்ற சிலையை உருவாக்கத் தன்னையே சிற்பியாக மாற்றிக் கொள்பவர்கள் தந்தையர்கள். அப்படிப்பட்ட தந்தையை போற்றிக்கொண்டாடும் நாள் தான் இன்று.

ஐ லவ் யூ டாடி
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் தனது அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து . ஐ லவ் யூ டாடி. இன்று மட்டுமல்ல எல்லா நாளும் தந்தையர் தினம் தான் என பதிவிட்டுள்ளார்.

வாழ்த்துக்கள் அப்பா
நடிகர் சாந்தனு பாக்யராஜ், தனது தந்தையான பாக்யராஜுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

எப்போது என்னுடன் இருப்பீர்கள்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தந்தையர் தின வாழ்த்துக்களை கூறி தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், நான் என் அப்பாவுடன் மிகக் குறைந்த நாள் மட்டுமே இருந்திருக்கிறேன். ஆனால், அவர் விட்டுச் சென்ற நினைவுகள் என் வாழ்நாள் முழுவதும் இருக்கும். நான் என் அப்பாவின் பெயரை என்னுடன் வைத்துள்ளேன். எப்போதும் அவர் என்னுடன் இருப்பதை உணர்கிறேன் என்று கூறியுள்ளார்
Recommended Video

வாழ்த்துக்கள்
தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் தன் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு தந்தையருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்களை என கூறியுள்ளார்.

வாழ்த்துக்கள் நான்னா
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது தந்தை கிருஷ்ணாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தந்தையர் தின வாழ்த்து கூறியுள்ளார். என் ஹீரோ, ஒளி, வலிமை, உத்வேகம், வழிகாட்டி, இவை அனைத்தும் நீங்கள். இன்றும் மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் உங்களை கொண்டாடுகிறேன். இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் நான்னா என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











