விதை நான் போட்டது.. சிவாஜி முதல் சியான் விக்ரம் வரை.. மகன்களை களமிறக்கிய அப்பாக்கள்!

சென்னை: பாலிவுட்டில் நெபோடிசம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி வருகிறது. கரண் ஜோஹருக்கு ஆதரவாக பேசிய ராம் கோபால் வர்மா, வாரிசு நடிகர்கள் பற்றிய நிதர்சனத்தை அண்மையில் டிவீட் செய்திருந்தார்.

தனது வாழ்நாளில் கஷ்டப்பட்டு முன்னேறும் ஒரு நடிகர், சூப்பர் ஸ்டார் ஆன பின்பு, அவரது வாரிசுகள் அறிமுகத்திற்கு அது ஒரு என்ட்ரி கேட்டாக இருந்தாலும், அந்த நடிகருக்கு திறமை இருந்தால் மட்டுமே தந்தையை விட சிறப்பான நடிகராக உச்சம் தொட முடியும் என்பதை இந்திய சினிமாவில் பல உதாரணங்கள் மூலம் பார்த்திருக்கிறோம்.

தந்தையர் தின ஸ்பெஷலாக, தமிழ் சினிமாவில் சாதித்த அப்பா மற்றும் மகன்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

தாய்க்கும் மேலானவர்

தாய்க்கும் மேலானவர்

தாய்க்கும் மேலாக இந்த உலகில் ஒரு உயிர் உள்ளது என்றால், அது நிச்சயம் தந்தை தான். எல்லாம் அவர் போட்ட விதை தான். அன்னையர் தினம், மகளிர் தினம் விமர்சையாக கொண்டாடுவது போல சில ஆண்டுகளாக தந்தையர் தினத்தையும் மக்கள் கொண்டாட துவங்கி உள்ளனர். ஜூன் 21ம் தேதியான இன்று நாடு முழுவதும் தந்தையர் தினம் #HappyFathersDay2020 மற்றும் #தந்தையர்தினம் என்ற ஹாஷ்டேக்கில் கொண்டாடப்படுகிறது.

சிவாஜி – பிரபு

சிவாஜி – பிரபு

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாடகங்களில் நடித்து, சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உருவெடுத்து, எண்ணற்ற மெகா ஹிட் படங்களை கொடுத்தவர். சிவாஜியை போல நடிக்க இந்த உலகில் வேறு நடிகரே இல்லை என்ற அளவுக்கு அப்போதே பெயரெடுத்தவர். அவரது மகன் பிரபு, நடிகராக மாறி சின்னதம்பி உள்ளிட்ட பல வெள்ளி விழா படங்களை கொடுத்துள்ளார். தற்போது, பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் தமிழ் சினிமாவின் ஹாட் ஹீரோவாக மாறியுள்ளார்.

சிவகுமார் – சூர்யா, கார்த்தி

சிவகுமார் – சூர்யா, கார்த்தி

சிவாஜி கணேசனுடன் பல படங்களில் இணைந்து நடித்தும், தனியாக ஹீரோவாக கலக்கியும் வந்த தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என பாராட்டப் பெற்ற நடிகர் சிவகுமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். இருவரது நடிப்பும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

எஸ்.ஏ. சந்திரசேகர் – விஜய்

எஸ்.ஏ. சந்திரசேகர் – விஜய்

தமிழ் சினிமாவில் இயக்குநராக அசத்திய எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் விஜய் என்ற நிலை மாறி, தற்போது தளபதி விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் என்ற நிலைக்கு முன்னேறியுள்ளார். நாளை நடிகர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று தந்தையர் தினத்தை கொண்டாடி வருகிறார் விஜய்.

விஜயகுமார் – அருண் விஜய்

விஜயகுமார் – அருண் விஜய்

நடிகர் விஜயகுமார் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணசித்ர நடிகராகவும் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். தனது மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தினாலும், அருண் விஜய்க்கு ஆரம்ப கால படங்கள் சொதப்பலாகவே அமைந்தன. பின்னர், தனக்குள் இருக்கும் நடிப்பு திறமையை வளர்த்துக் கொண்டு, செகண்டு இன்னிங்ஸில் தற்போது தடம் பதித்துள்ளார்.

கஸ்தூரி ராஜா – செல்வராகவன், தனுஷ்

கஸ்தூரி ராஜா – செல்வராகவன், தனுஷ்

இயக்குநரான கஸ்தூரி ராஜா, சினிமாவில் இதுக்கு மேல தனக்கு வாழ்க்கை இல்லை என நினைக்கும் போது, மூத்த மகனான செல்வராகவன் அப்பாவுக்காக கதை எழுதி, தம்பி தனுஷை ஹீரோவாக்கி மீண்டும் கஸ்தூரி ராஜாவை தலை நிமிர செய்தார். அண்ணன், அப்பா தூக்கி விட்டாலும், நடிகர் தனுஷ் தனது தனித் திறமையால் தற்போது ஹாலிவுட் வரை நடித்து அசத்தி வருகிறார்.

விக்ரம் – த்ருவ் விக்ரம்

விக்ரம் – த்ருவ் விக்ரம்

ஏகப்பட்ட நடிகர்கள், திரைக் கலைஞர்கள் தங்கள் வாரிசுகளை சினிமாவில் களமிறக்கி சாதித்து வருகின்றனர். இந்த பட்டியலில் லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பது நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் த்ருவ் விக்ரம். சியான் விக்ரமை போல நடிப்பில் தன்னால் மிரட்ட முடியும் என்பதை முதல் படமான ஆதித்ய வர்மாவிலே நிரூபித்து விட்டார். அடுத்ததாக அப்பாவுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X