For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே.. கோலிவுட்டின் டாப் 5 அன்பான அப்பாக்கள்!

  |

  சென்னை: கோலிவுட்டில் அம்மாவாக நடித்து நடிகைகள் அசத்தியதுபோல, பல சிறந்த நடிகர்கள்பாசமான அப்பாவாகவும் நடித்து நம் நெஞ்சில்குடியிருக்கின்றனர்.

  கதாநாயகர்களாக அசத்திய பல டாப் ஹீரோக்களும்அன்பான அப்பா கதாபாத்திரத்தில் நடித்து கதைக்கு பக்க பலமாக பல படங்களில் இருந்துள்ளனர்.

  வரும் ஜூன் 21ம் தேதி தந்தையர் தினம் வருவதை முன்னிட்டு, கோலிவுட்டில் அப்பா கதாபத்திரத்தில் நடித்து பிரபலமான டாப் 5 நடிகர்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

  மூன்றாம் பிறை டு அந்த 7 நாட்கள்.. வைரலாகும் புதிய ஃபர்ஸ்ட் லுக்.. மூன்றாம் பிறை டு அந்த 7 நாட்கள்.. வைரலாகும் புதிய ஃபர்ஸ்ட் லுக்.. "வேற லெவல்னா" என பாராட்டிய அட்லி!

  அப்பா அப்பாதான்

  அப்பா அப்பாதான்

  அன்பு என்றால் அம்மா என்றும், அப்பா என்றால் கண்டிப்பு என்பதுமே காலங்காலமாக இந்திய குடும்பங்களின் வழக்கமாக இருந்து வருகிறது. அளவுக்கடந்த பாசம் அப்பாவுக்கு இருந்தாலும், செல்லம் கொஞ்சுதலால் தவறான வழிக்கு பிள்ளைகள் போகக் கூடாது என்று அப்பாக்கள் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆகவே இருப்பார்கள்.

  பிரகாஷ்ராஜ் – சந்தோஷ் சுப்பிரமணியம்

  பிரகாஷ்ராஜ் – சந்தோஷ் சுப்பிரமணியம்

  ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில், பிள்ளையை தன் கைக்குள்ளே வைத்திருக்கவேண்டும் என நினைக்கும் அப்பாவாக பிரகாஷ் ராஜ் நடித்து அசத்தி இருப்பார். அபியும் நானும் படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் தரமான நடிப்பை கொடுத்திருப்பார். பெண் பிள்ளையே வளர்ந்தாலும், அவள் தனது தந்தைக்கு என்றுமே குழந்தை தான் என்பதை அந்த படம் விளக்கி இருக்கும்.

  ராஜ்கிரண்– தவமாய் தவமிருந்து

  ராஜ்கிரண்– தவமாய் தவமிருந்து

  வாழ்க்கையின் நிதர்சனங்களையும், யதார்த்தங்களையும் கதைக்களமாக கொண்டு படமெடுத்து வந்த இயக்குநர் சேரன் இயக்கத்தில் 2005ம்ஆண்டு வெளியான ஒரு பொக்கிஷம்தான் தவமாய் தவமிருந்து. இரண்டுஆண் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் தந்தை ராஜ்கிரண், பிள்ளைகள் வளர்ந்து அவர்களால் நேரும் தொல்லைகளையும் பொறுத்துக்கொண்டு வாழும் தந்தையாக கலக்கி இருப்பார்.

  சத்யராஜ்– கனா

  சத்யராஜ்– கனா

  தந்தையின் கனவை மகளும், மகளின் கனவை தந்தையும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து எப்படி சாதிக்கிறார்கள் என்பதை கனா படம் அற்புதமாக எடுத்துக் காட்டியிருக்கும். தீபிகா படுகோனேவுக்கு அப்பாவாக நடித்து அசத்திய நம்ம கட்டப்பா, கெளசல்யாவின் தந்தை முருகேசனாக நடித்தநடிப்பு இன்னும் பல காலம் நம் தமிழ் சினிமாவில் பாராட்டுக்களை அள்ளும்

  நாசர்– எம் மகன்

  நாசர்– எம் மகன்

  மெட்டிஒலி, நாதஸ்வரம், கல்யாண வீடு உள்ளிட்ட சீரியல்களை இயக்கி சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் திருமுருகன், நடிகர் பரத், கோபிகா, நாசர், சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் உருவான எம் மகன் படத்தை இயக்கி சினிமாவிலும் வெற்றியை ருசி கண்டார். கண்டிப்பான தந்தையாகவும் மகனை கொஞ்சமும் மதிக்காத அப்பாவாகவும் அந்த படத்தில் நடித்த நாசர், கிளைமேக்ஸில் வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தி அப்பாக்கள் ஏன் கண்டிக்கின்றனர் என்பதை வெளிக்காட்டி இருப்பார்.

  ரகுவரன்– யாரடி நீ மோகினி

  ரகுவரன்– யாரடி நீ மோகினி

  மித்ரன்ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நயன்தாரா நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி திரைப்படத்தில், அப்பாவுக்கும் மகனுக்கும் ஆகவே ஆகாது என்பதுபோல ஆரம்பத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், மகன் இன்டர்வியூவில் தேர்வான செய்தி கேட்டு சந்தோஷப்படும் இடமாகட்டும், மகனுக்காக அவனது காதலியிடம் அறைவாங்கும் இடமாகட்டும் ரகுவரன் அப்பாக்களின் பிரதிநிதியாக பிரதிபலித்து இருப்பார்.

  English summary
  On Behalf of Father’s Day which will arrive on Jun 21st, here we spotted out some famous ‘Dad’ role actors of Tamil Cinema.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X