மன்சூர் பேசினா தப்பு.. ரஜினிகாந்த் தமன்னா பத்தி பேசினா தப்பில்லையா?.. பாத்திமா பாபு கேள்வி?
சென்னை: ஹீரோ ரஜினி தமன்னா கூட ஆட விடலன்னு கேட்குற மாதிரி தானே வில்லன் நடிகர் திரிஷா கூட அப்படியொரு சீன் வைக்கலன்னு கேட்டாரு இது தப்புன்னா? அப்போ அது தப்பு இல்லையா என பாத்திமா பாபு கேள்வி எழுப்பி உள்ளார்.
மன்சூர் அலி கான் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசி விட்டதாக பெரும் சர்ச்சை வெடித்த நிலையில், நேற்று ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி தனிப்பட்ட திரிஷா குறித்து அவதூறாக பேசவில்லை என்றும் நடிகை திரிஷா பற்றி சினிமா ரீதியாகவே பேசினேன் என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

நடிகை திரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து சினிமா பிரபலங்கள் பலர் மன்சூர் அலி கானுக்கு எதிராக பேசி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதும் தப்பு தானே அப்படி பார்த்தால் என பாத்திமா பாபு புதிய பஞ்சாயத்தை கிளப்பி உள்ளார்.
பாத்திமா பாபு: கல்கி படத்தில் அறிமுகமான பாத்திமா பாபு விஐபி, நேருக்கு நேர், சொல்லாமலே, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், நீ வருவாய் என, முதல்வன், பார்த்தேன் ரசித்தேன், மின்னலே, கோவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். செய்தி வாசிப்பாளரான பாத்திமா பாபு சமீபத்தில் அளித்த பேட்டியில் மன்சூர் அலி கான் மற்றும் திரிஷா பற்றிய கேள்விக்கு அவர் ஒரு கேள்வி எழுப்பி சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
மன்சூர் அலி கான் - திரிஷா விவகாரம்: லியோ படத்தில் இணைந்து நடித்த போது நடிகை திரிஷாவுடன் பலாத்கார காட்சி எல்லாம் இருக்கும் என நினைத்தேன். பழைய படங்களில் குஷ்பு, ரோஜாவை எல்லாம் கட்டிலில் தூக்கிப் போட்டு நடித்தது போல சான்ஸ் கிடைக்கும் என்று பார்த்தால், அனுமார் சஞ்சீவி மலையை தூக்கிட்டுப் போனது போல அலேக்காக அவரை காஷ்மீருக்குக் கொண்டு போய்ட்டு கொண்டு வந்து விட்டார் லோகேஷ் கனகராஜ். கண்ணிலேயே காட்டவில்லை என்று மன்சூர் அலி கான் பேசியதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்து இருந்தார். தேசிய மகளிர் ஆணையம் சார்பில் மன்சூர் அலி கான் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
ரஜினி பேசியது தப்பில்லையா?: இந்நிலையில், வில்லன் நடிகர் மன்சூர் அலி கான் பலாத்கார காட்சி குறித்து கேட்டது தப்பு என்றால், ஹீரோ ரஜினிகாந்த் தமன்னாவுடன் கடைசி வரை ஆட விடவே இல்லை என ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியதும் தப்பு தானே? அதற்கு ஏன் யாருமே பொங்கல என பாத்திமா பாபு கேள்வி எழுப்பி உள்ளார்.
காமெடியாக பேசுவதும், பொதுவெளியில் பலாத்கார காட்சி தொடர்பாக அநாகரிகமாக பேசுவதற்கும் வித்தியாசம் இல்லையா? என ரஜினி ரசிகர்கள் பாத்திமா பாபுவை விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











