உனக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையே இல்ல லாஸ்லியா.. உடைந்து போன பிக்பாஸ் பிரபலம்.. இன்ஸ்டாவில் உருக்கம்!
சென்னை: தந்தையை இழந்து வாடும் லாஸ்லியாவுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையே இல்லை என பிக்பாஸ் பிரபலம் ஒருவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமானவர் லாஸ்லியா.
இலங்கையை சேர்ந்த லாஸ்லியா அந்நாட்டு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.

தந்தை திடீர் மரணம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. அடுத்தடுத்து மூன்று படங்களில் கமிட்டாகியுள்ள லாஸ்லியா படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் நேற்று முன்தினம் இரவு திடீரென மரணமடைந்தார்.

ஹேஷ்டேக்ஸ்
கனடாவில் வேலை பார்த்து வந்த மரியநேசன், திடீரென உயிரிழந்தார். அவரது மறைவு குறித்த செய்தி நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. #Losliya மற்றும் #RIPMariyanesan ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகின.

பிக்பாஸ் சீசன் 3
லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்ததை அறிந்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இதேபோல் பிக்பாஸ் சீசன் 3யில் பங்கேற்ற போட்டியாளர்கள் லாஸ்லியாவின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சேரன் உருக்கம்
மேலும் படப்பிடிப்புக்காக சென்னை வந்த லாஸ்லியா உடனடியாக இலங்கை செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். டிவிட்டரில் இரங்கல் தெரிவித்த இயக்குநர் சேரன், என்னையே இந்த செய்தி உலுக்குகிறதே.. நீ எப்படி தாங்குவாய் மகளே என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

பிக்பாஸ் பிரபலங்கள்
இதேபோல் வனிதாவும் தனது டிவிட்டர் பக்கத்தில் மரிய நேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் லாஸ்லியாவுடன் டச்சில் இருப்பதாகவும் கூறினார். அபிராமி உட்பட மேலும் சில பிக்பாஸ் பிரபலங்கள் லாஸ்லியாவுக்கு ஆறுதலாக இருந்து வருகின்றனர்.

ஃபாத்திமா பாபு
இந்நிலையில் செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான ஃபாத்திமா பாபு, மரியநேசனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது இன்ஸ்டா பதிவில், மிகுந்த துயரத்தில் உள்ள அந்த குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்.

வார்த்தைகளே இல்லை
லாஸ்லியாவுக்கு ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லை.. என பதிவிட்டுள்ளார். அவரது பதிவை பார்த்த பலரும் லாஸ்லியாவின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். லாஸ்லியா தைரியமாக இருக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











