ஆட்டம் வெறித்தனமால்ல இருக்கு.. இதாங்க பிகில் ட்ரெயிலர்! #BigilTrailer

Recommended Video

Bigil Official Trailer | Thalapathy Vijay | Nayanthara | Atlee | AGS

சென்னை: பிகில் படத்தின் ட்ரெயிலர் இன்று மாலை வெளியானது இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களை விஜய் ரசிகர்கள் அதிரவிட்டு வருகின்றனர்.

விஜய், அட்லி, ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் பிகில். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் வரும் தீபாவளிக்கு ரிலிஸாகும் என தெரிகிறது.

பிகில் படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். கால்பந்து பயிற்சியாளராகவும், வயதான தோற்றத்திலும் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இதில் நடிகை நயன்தாரா மருத்துவ மாணவியாக நடித்துள்ளார்.

போட்றா வெடிய

போட்றா வெடிய

பிகில் படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியான நிலையில் இன்று காலை போட்றா வெடிய என்ற பிகில் படத்தின் ட்ரெயிலரை விளம்பரப்படுத்தும் வகையில் மற்றொரு போஸ்டர் வெளியிடப்பட்டது.

ஹேஷ்டேக்

படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி படத்தின் இந்த போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் காலை 10.30 மணிக்கு வெளியிட்டார். இதனால் டிவிட்டர் வலைதளத்தில் போடுறா வெடிய என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது.

ட்ரென்டிங்கில் முதலிடம்

இதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் பிகில் படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்படும் என்று படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி ட்விட்டர் வலைதளத்தில் #BigilTrailerDay என்ற ஷேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது.

வெளியான ட்ரெயிலர்

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பிகில் படத்தின் ட்ரெயிலர் வெளியானது. ஃபுட்பால் கிரவுண்டில் குட்மார்னிங் கோச் என பூவா தலையா போடுவதில் தொடங்ககும் ட்ரெயிலர் மோதல் மற்ற மாநிலத்தவரின் கிண்டலுக்கு ஆளாவது என தொடர்கிறது.

அதிரடி காட்டும் விஜய்

இதில் ஒரு விஜய் வயதான தோற்றத்தில் அதிரடி காட்டுகிறார். மற்றொரு விஜய் இளம் தோற்றத்தில் ஃபுட் பால் கோச்சாக அசத்தியிருக்கிறார். முழுக்க கால்பந்து விளையாட்டில் நடக்கும் அரசியலை மையப்படுத்திய கதைக்களம் என்பது படத்தின் ட்ரேயிலர் மூலம் தெரியவந்துள்ளது.

வியூஸ்

வியூஸ்

ட்ரெயிலர் வெளியான சில நிமிடங்களிலேயே யூட்யூப்பில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களை குவித்திருக்கிறது. ஏராளமான லைக்ஸ்களையும் அள்ளியிருக்கிறது பிகில் படத்தின் ட்ரெயிலர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X