பிப்ரவரி 2 மற்றும் 3ம் தேதி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் விடுமுறை... விஷால் அறிவிப்பு!
இளையராஜா 75 நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை : இளையராஜா 75 நிகழ்ச்சியை முன்னிட்டு வரும் பிப்ரவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவை கவுரவிக்கும் வகையில் 'இளையராஜா 75' எனும் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 2 மறறும் 3ம் தேதிகளில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இந்நிகழ்ச்சியை நடத்துக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையை இசையமைப்பாளர் இளையராஜா நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உள்ளூர் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாகக் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது,

இளையராஜா 75 நிகழ்ச்சி
"'இளையராஜா 75' நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது. ஆன்லைனில் இந்த டிக்கெட்டுகளை புக் செய்யலாம்.

4 மொழி கலைஞர்கள்
பிப்ரவரி 2ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா ஆகிய நான்கு மொழி கலைஞர்கள் சேர்ந்து இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாடி, ஆடும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிப்ரவரி 3ம் தேதி இளையராஜா மட்டும் தனது பாடல்களை பாடுவார்.

எல்லோருக்கும் அழைப்பிதழ்
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எல்லோருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. ரஜினி, கமல் ஆகியோர் உள்பட அனைத்து நடிகர், நடிகைகள், பாடகர்கள் என அனைவருக்கும் இந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

எஸ்.பி.பி.உள்பட
எஸ்.பி.பி. உள்பட இளையராஜாவுடன் பயணித்த அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம். அதேபோல தயாரிப்பாளர் சங்கத்தில் எதிரணியில் இருப்பவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

படப்பிடிப்புகள் ரத்த
இளையராஜா 75 நிகழ்ச்சியை முன்னிட்டு, வரும் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் உள்ளூர் மற்றும் வெளியூர் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா சங்கங்களும் விடுமுறை அறிவித்துள்ளன. இந்நிகழ்ச்சியை மிக பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்", என நடிகர் விஷால் கூறினார்.


Click it and Unblock the Notifications











