twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்றைய ரிலீஸில் எந்தப்படம் ஜெயிக்கும்... பாலாவுக்கும் பாக்கியம் சங்கருக்கும் தான் போட்டியா?

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    இந்த வாரம் வந்த படங்களில் எந்த படம் மலையேறும் எந்த படம் மண்ணை கவ்வும்,,?

    சென்னை : பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையான இன்று தமிழ் சினிமாவில் ஐந்து திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

    'நாச்சியார்', 'நாகேஷ் திரையரங்கம்', 'வீரா', 'மனுசனா நீ' மற்றும் 'மேல் நாட்டு மருமகன்' ஆகிய ஐந்து படங்கள் களத்தில் இறங்குகின்றன.

    இன்று வெளியாகும் இந்தப் படங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தைப் பார்க்கலாம். இவற்றில் எந்தப் படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெறும் என்பது இன்றே தெரிந்துவிடும்.

    நாச்சியார்

    நாச்சியார்

    இயக்குநர் பாலா தயாரித்து இயக்கியுள்ள படம் 'நாச்சியார்'. இதில் ஜி.வி. பிரகாஷ், ஜோதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். 'நாச்சியார்' படத்தின் முதல் டீசர் வெளியான போது அதில், ஜோதிகா பேசும் கெட்ட வார்த்தை பெரும் சர்ச்சையானது. இதையடுத்து, சமீபத்தில் வெளியான ப்ரொமோ வீடியோவில் ஜோதிகா, 'கோவிலாக இருந்தாலும் குப்பைமேடாக இருந்தாலும் எங்களுக்கு ஒண்ணு தான்' என வசனம் பேசி புதிய சர்சைக்கு வழிவகுத்தார். இதனால் 'நாச்சியார்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

    வீரா

    வீரா

    இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பி நடிகர் கிருஷ்ணா நடித்திருக்கும் படம் 'வீரா'. இந்தப் படத்தில், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். வடசென்னை மனிதர்களின் அழகியலான முகங்களை எழுத்தின் மூலமாகப் பதிவு செய்திருக்கும் பாக்கியம் சங்கர் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுத ராஜா ராமன் இயக்கயிருக்கிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார்.

    நாகேஷ் திரையரங்கம்

    நாகேஷ் திரையரங்கம்

    'நெடுஞ்சாலை', ஆரியும்,'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், 'இனிமே இப்படித்தான்' ஆகிய படங்களில் நடித்த ஆஷ்னா சவேரியும் இப்படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். திரையரங்கில் இருக்கும் பேய் என்ற கான்செப்ட்டில் படம் உருவாகி இருக்கிறது. இசாக் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் காளி வெங்கட், மனோ பாலா, சித்ரா லட்சுமணன், லதா, சித்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். ஸ்ரீ இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

    மனுசனா நீ

    மனுசனா நீ

    கஸாலி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து இயக்கியுள்ள படம் 'மனுசனா நீ'. இந்தப் படத்தை இவரே தயாரித்தும் இருக்கிறார். புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தின் பெயரைப் போலவே வித்தியாசமான முயற்சிகளில் ப்ரொமோட் செய்திருக்கிறார் கஸாலி.

    மேல்நாட்டு மருமகன்

    மேல்நாட்டு மருமகன்

    'மேல்நாட்டு மருமகன்' படத்தில் சின்னத்திரை நடிகர் ராஜ்கமல் நாயகனாக நடித்திருக்கிறார். பிரான்ஸை சேர்ந்த ஆண்ட்ரீயன் என்னும் பெண் நாயகியாக அறிமுகமாகிறார். வி.எஸ்.ராகவன், அஞ்சலிதேவி, அசோகராஜ், சாத்தையா ஆகியோரும் நடித்துள்ளனர். வே.கிஷோர் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    இன்று வெளியாகும் ஐந்து தமிழ்ப் படங்களில் பாலா இயக்கியிருக்கும் 'நாச்சியார்' படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கிருஷ்ணா நடித்திருக்கும் 'வீரா' திரைப்படமும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஆரியின் நடிப்பில் உருவாகியிருக்கும் 'நாகேஷ் திரையரங்கம்' கவனம் ஈர்க்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

    English summary
    Today (February 16) five films are released in Tamil cinema. Bala's' Naachiyar', Aari's 'Nagesh Thiraiyarangam', Krishna's 'Veera', Khasali's 'Manusana Nee' and Rajkamal starring 'Melnaattu marumagan' are released.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X