twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    5 படத்துல எந்தப் படம் ஜெயிக்கும்..? பலத்த போட்டியோடு வெளியாகும் தமிழ் படங்கள்!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    மதுர வீரன் படத்தில் விஜய் உள்ளாரா.. எப்படி ?

    சென்னை : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் 200-க்கும் அதிகமான படங்கள் வெளியாகின்றன. இந்த ஆண்டும் அதே எண்ணிக்கையைத் தொடும் வேகத்தில் படங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

    தற்போது முடிந்திருக்கும் ஜனவரி மாதத்தில் மட்டும் மொத்தம் 14 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன.

    பிப்ரவரி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நாளை 5 படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. இதில் எதிர்பார்ப்பு மிகுந்த சில படங்களும் இருக்கின்றன.

    ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

    ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

    விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா, ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ள 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆறுமுககுமார் இயக்கி இருக்கிறார். விஜய் சேதுபதியின் படங்கள் வரிசையாக ஹிட் அடிப்பதால், இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

    படைவீரன்

    படைவீரன்

    பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாஸ், தந்தையின் வழியில் பின்னணிப் பாடகராக சினிமாவுக்கு அறிமுகமானவர். இப்போது, மணிரத்னத்தின் உதவியாளர் தனா இயக்கும் 'படைவீரன்' படத்தில் விஜய் யேசுதாஸ் ஹீரோவாகவும், புதுமுகம் அம்ரிதா நாயகியாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் பாரதிராஜா இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    மதுரவீரன்

    மதுரவீரன்

    விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்திருக்கும் மதுரவீரன் படம், ஜல்லிக்கட்டை பின்னணியாக கொண்ட கதை. ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இப்படத்தின் மூலம் இயக்குனர் ஆகி இருக்கிறார். புதுமுகம் மீனாட்சி நாயகியாக நடித்திருகிறார். நாயகன் சண்முக பாண்டியனின் தந்தையாக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். சந்தோஷ் தயாநிதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    ஏமாலி

    ஏமாலி

    வி.இசட்.துரை இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஏமாலி'. இப்படத்தில் சாம் ஜோன்ஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அதுல்யா நாயகியாக நடித்திருக்கிறார். சமுத்திரக்கனி முக்கிய கதாப்பாத்திரம் ஏற்றுள்ளார். சிங்கம்புலி, பால சரவணன் ஆகியோர் காமெடி வேடத்தில் நடித்துள்ளனர்.

    விசிறி

    விசிறி

    புதுமுகங்கள் ராஜ்சூர்யா, ராம்சரவணா, ரெமோனா ஸ்டெஃபானி ஆகியோர் நடித்திருக்கும் 'விசிறி' படத்தை வெற்றி மகாலிங்கம் இயக்கி இருக்கிறார். விஜய் ரசிகனுக்கும், அஜித் ரசிகனுக்கும் உள்ள மோதலை சொல்லும் விதமாக இந்தப் படம் உருவாகி இருக்கிறதாம்.

    பலத்த போட்டி

    பலத்த போட்டி

    நாளை ரிலீஸ் ஆகும் படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து வெற்றி பெறும் படம் எது என ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

    English summary
    In Tamil cinema every year more than 200 films are released. Pictures are coming in at the same number of years this year. Only 14 films have been released in January. The first Friday of the month of February is 5 films, including 'Padaviran' and 'Madurai Vivekan'. There are some expectations too. Tomorrow is the release of Vijay Sethupathi in the films 'A good day is going to say' release in most the theaters.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X