சினிமா படப்பிடிப்புகள் ரத்து.. சர்தார் 2 சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உயிரிழந்த நிலையில் பெப்சி முடிவு!

சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், சமீபத்தில், சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் 20 அடி உயரத்தில் இருந்து எந்தவொரு பாதுகாப்பும் இன்றி கீழே விழுந்ததில் உயிரிழந்தது சினிமா துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சினிமா படப்பிடிப்புகளில் சண்டை பயிற்சியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக நடைபெறும் கூட்டம் வரும் ஜூலை 25ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அன்றைய தினம் சினிமா படப்பிடிப்புகளை ஒரு நாள் ரத்து செய்ய பெப்சி அமைப்பு முடிவு செய்துள்ளது.

Sardar 2 Accident Karthi 2


ரியாலிட்டிக்காகவும் ஏகப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகளை வைத்து ஹீரோவுக்கான பெரியளவில் பில்டப்புகளை கொடுக்க பல ரிஸ்க்கான சண்டைக் காட்சிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

ரிஸ்க் எடுக்கும் ஸ்டண்ட் மேன்: ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் இன்னமும் விமானத்தில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார். சிஜி எல்லாம் தரமாக வந்த நிலையிலும், ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுக்க வேண்டும் என உயிரை பணயம் வைத்து நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் அஜித் குமார் அஜர்பைஜானில் ஆரவ்வுடன் காரில் அந்தர் பல்டி அடித்து விபத்தில் சிக்கிய வீடியோ காட்சிகள் எல்லாம் பதை பதைப்பை ஏற்படுத்தின. முன்னணி நடிகர்களுக்கு சண்டைக் காட்சிகளில் டூப் போட்டு பல ஸ்டண்ட் மேன்கள் தங்கள் உயிரையே கொடுத்து வருவதையும் பார்த்து வருகிறோம்.

உயிரிழந்த ஏழுமலை: பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கன்னா, எஸ்.ஜே. சூர்யா நடித்து வரும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், சண்டை பயிற்சியாளர் ஏழுமலை 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நடிகர் கார்த்தி அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

படப்பிடிப்பு ரத்து: வரும் ஜூலை 25ம் தேதி பெப்சி சார்பாக ஒருநாள் சிறப்பு விழிப்புணர்வு தினம் இதுதொடர்பாக அனுசரிக்கப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் சண்டை பயிற்சி கலைஞர்களுக்கு போதிய வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றும் ஆம்புலன்ஸ் ஒன்றும் மருத்துவ உதவிகளும் கட்டாயம் தேவை என்பதை வலியுறுத்தி அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்றைய தினம் எந்தவொரு படப்பிடிப்பும் சென்னையில் நடைபெறாது என பெப்சி அறிவித்துள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X