பெப்சி அமைப்புக்கு தேர்தல் - 9-ந் தேதி நடக்கிறது
சென்னை: பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு வரும் ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
பெப்சிக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். 2012-2014-ம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
அன்று காலை 9 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெறும்.
அன்று இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், தேர்தல் அதிகாரியாக ஸ்டண்ட் iனியன் முன்னாள் செயலாளர் கே.நாராயணன் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் 'பெப்சி' செயலாளர் ஜி.சிவா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications