தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ஃபெப்சிக்கு 14ஆம் தேதி தேர்தல்..ஆர்கே செல்வமணி அறிவிப்பு!
சென்னை: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ஃபெப்சி அமைப்புக்கு வரும் 14ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அதன் தலைவரான ஆர்கே செல்வமணி அறிவித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ஃபெப்சியில் 25000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். ஃபெப்சி அமைப்புக்கு மூன்று ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெற்று வருகிறது.
தற்போது ஃபெப்சி தலைவராக ஆர்கே செல்வமணி உள்ளார். பொது செயலாளராக அங்கமுத்து ஷண்முகம் உள்ளார். இவருடைய பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில் 2021 - 2023ஆம் ஆண்டுக்கான ஃபெப்சி தேர்தல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ஃபெப்சி தலைவரான ஆர்கே செல்வமணி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் 2021 - 2023ஆம் ஆண்டுக்கான ஃபெப்சி தேர்தல் வரும் 14ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்தார். இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 7ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications