twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குடிபோதையில் பெப்சி உறுப்பினர்கள் பத்திரிகையாளர்களுடன் மோதல்!

    By Shankar
    |

    சென்னை: சினிமா விழாவில் பெப்சி உறுப்பினர்கள் குடித்துவிட்டு வந்து பத்திரிகையாளர்களுடன் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தமிழ்சினிமாவில் நாளுக்கு நாள் பெப்ஸி எனப்படும் தென்னிந்திய திரைப்பட சம்மேளன உறுப்பினர்களின் அடாவடி அதிகரித்துக் கொண்டே போகிறது.

    தொழிலாளர்கள் என்பதால் பலர் மனதிலும் உண்டாகும் சலுகை மனப்பான்மையை சிதைக்கும் வகையில் அவர்களின் போக்கு அமைந்துள்ளது.

    நேற்று பெப்சி உறுப்பினர்கள் சிலர் ஒரு படத்தின் விழா நடக்கும் இடத்துக்கே வந்து பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்குப் போய்விட்டனர்.

    பெப்ஸி

    பெப்ஸி

    தமிழ் சினிமாவில் 24 சங்கங்களை உள்ளடக்கிய அமைப்பு தான் பெப்ஸி. இந்த அமைப்பில் உள்ளவர்களைத் தவிர வேறு யாரையும் தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் படங்களில் பணிகளில் அமர்த்தக்கூடாது என்பது எழுதப்படாத சட்டம்.

    ஆரம்பத்தில் ஒரு ஒற்றுமை உணர்வு வேண்டும், அதே நேரம் பணியாளர்களை தேடி அலையும் நேரமும் குறையும் என்பதால் தயாரிப்பாளர்கள் இந்த அமைப்பில் உள்ள தொழிலாளர்களை தாங்கள் தயாரிக்கும் படத்தில் வேலைக்கு அமர்த்தினார்கள்.

    ஏகபோகம்

    ஏகபோகம்

    ஆனால் அதுவே காலப் போக்கில் அவர்கள் ஏகபோகம் செய்யும் அளவுக்கு வளர்ந்து விட்டது. உள்ளூரில் படப்பிடிப்பு என்றால் ஒரு சம்பளம், வெளியூரில் படப்பிடிப்பு என்றால் ஒரு சம்பளம், ஞாயிற்றுக்கிழமை என்றால் டபுள் மடங்கு சம்பளம், அதுபோக ஏகப்பட்ட அலவன்ஸ்கள் என்று அவர்களின் ஏக போகம் அதிகரித்துக்கொண்டே போனது.

    இதனால் அவ்வப்போது பெப்ஸி அமைப்பினருக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் மோதல் ஏற்பட்டது. மேலும் எந்த ஒரு சினிமா நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் எங்க சங்கத்தைச் சேர்ந்தவர்களைத்தான் வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்தம் செய்தனர்.

    இசை வெளியீட்டு விழா

    இசை வெளியீட்டு விழா

    ஆனால் பத்திரிகையாளர்கள் கலந்து கொள்ளும் இசை வெளியீட்டு விழா, செய்தியாளர் கூட்டம் உள்ளிட்ட சினிமா நிகழ்ச்சிகளில் மட்டும் அவர்களின் தலையீடு இல்லாமல் இருந்து வந்தது. இந்த சூழலில் இன்று காலை சென்னையிலுள்ள பிரசாத் லேப் தியேட்டரில் "ஆதியும் அந்தமும்" படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து கொண்டிருந்தது.

    உணவு வழங்கக் கூடாது

    உணவு வழங்கக் கூடாது

    விழா காலை 9 மணிக்கு என்பதால் வந்திருந்த பத்திரிகையாளர்களுக்கு காலை உணவை கேட்டரிங் ஆட்கள் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த பெப்ஸி அமைப்பைச் சேர்ந்த பாபு, சந்திரன் ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு உணவு பரிமாறுபவர்களிடம் உடனே பரிமாறுவதை நிறுத்து, கொண்டு வந்த உணவுகளையெல்லாம் வண்டியில் ஏற்று என்று சத்தம் போட்டனர்.

    ஏன் அப்படி செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் இந்த வேலையைச் செய்வார்கள். அதற்கு தயாரிப்பாளர் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    வெளிய வந்துடுவியா?

    வெளிய வந்துடுவியா?

    ஆனால் 'இது பத்திரிகையாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி, இதில் எப்படி நீங்கள் தலையிட முடியும்' என்று மூத்த பத்திரிகையாளர்கள் ஜெ.பிஸ்மி, மணவை பொன்மாணிக்கம், சங்கர், வி.கே. சுந்தர், ரவிஷங்கர் ஆகியோர் கேட்டனர்.

    ஆனால் அவர்களை நீ யாரு எங்களை கேள்வி கேட்க..? என்று சத்தமாகக் கேட்டுவிட்டு அவர்களை தரக்குறைவாகவும் பேசிய பெப்ஸி உறுப்பினர்கள் "பிரசாத் லேப் தியேட்டரை விட்டு வெளியில வந்துடுவியா..?" என்று கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. வந்திருந்த பெப்ஸி அமைப்பினர் ரெளடிகளைப் போல அராஜகம் செய்தனர்.

    வீடியோ

    வீடியோ

    தியேட்டருக்கு வெளியே சத்தம் அதிகமானதையடுத்து கடுப்பான பத்திரிகையாளர்கள் அவர்களுடன் வாக்குவாதம் செய்தனர் அவர்களின் அராஜகத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ரவிஷங்கர் என்ற மூத்த பத்திரிகையாளரின் செல்போனையும் பிடுங்கி எறிய முற்பட்டனர்.

    இதனால் கொந்தளித்த பத்திரிகையாளர்கள் பெப்ஸி அமைப்பின் செயலாளர் ஜி சிவாவிடம் விபரத்தைச் சொல்லி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி எச்சரித்தனர்.

    பெப்ஸியை புறக்கணிப்போம்

    பெப்ஸியை புறக்கணிப்போம்

    இல்லையெல்லாம் பெப்ஸி அமைப்பின் சார்பில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பத்திரிகையாளர்கள் வருவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

    இதுவரை நடந்த எந்த ஒரு பத்திரிகையாளர்களின் சந்திப்பிலும் பெப்ஸி அமைப்பினர் இந்தளவுக்கு அராஜகம் செய்யவில்லை என்றும், வந்திருந்தவர்கள் போதையில் தரக்குறைவாக நடந்து கொண்டனர் என்றும் பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டினர்.

    சாய்ந்தாடு சாய்ந்தாடு

    சாய்ந்தாடு சாய்ந்தாடு

    சில தினங்களுக்கு முன்பு தான் சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தின் தயாரிப்பாளர் பெப்ஸி தொழிலாளர்களின் அராஜகங்களைக் பட்டியலிட்டது நினைவிருக்கலாம். அதற்குள் அடுத்த அராஜக வேலையில் பெப்ஸி அமைப்பினர் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அமீரிடம் புகார்

    அமீரிடம் புகார்

    இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் அமீருக்கு புகார் செய்யப்பட்டுள்ளது. என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதைப் பொறுத்து பத்திரிகையாளர்களின் அடுத்த கட்ட நடவடிக்கௌ இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். பெப்ஸி தொழிலாளர்களின் இந்த அராஜகப் போக்குக்கு முடிவு கட்டுவாரா அமீர்?

    English summary
    Fefsi members clashed with cinema journalists at an audio release function on Wednesday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X