அறிவுரை சொல்ல உங்களுக்கு தகுதி இல்லை..பவன் கல்யாணுக்கு ஆர்.கே.செல்வமணி பதிலடி!
சென்னை: RK selvamani (ஆர்.கே.செல்வமணி பேட்டி) அறிவுரை சொல்ல உங்களுக்கு தகுதி இல்லை என்று பவன் கல்யாணுக்கு பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு, ஃபெஃப்சி புதிய விதிகளை அறிவித்திருந்தது. தமிழ் திரைப்படங்களில், தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மேலும், தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பை தமிழகத்திலேயே நடத்திட வேண்டும். அவசியம் ஏற்பட்டால் ஒழிய வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.

பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு: ஃபெஃப்சியின் இந்த அறிவிப்பை விமர்சித்து, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாண், ப்ரோ இசைவெளியீட்டு விழாவில் பேசி இருந்தார். அதில், கோலிவுட் சினிமாவில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் பணியாற்ற வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து தமிழ் திரையுலகை சார்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று பேசி இருந்தார். அவரின் இந்த பேச்சு தமிழ் திரையுலகில் சர்ச்சைகளை கிளப்பியது.
ஆர்கே செல்வமணி பேட்டி: இந்நிலையில் பவன் கல்யாணின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஆர்கே செல்வமணி, பான் இந்தியா திரைப்படம் தமிழில் மட்டும் தயாரிக்கப்படுவதில்லை அனைத்து மொழியிலும் தயாரிக்கிறார்கள். கேஜிஎஃப், காந்தாரா, ஆர்.ஆர்.ஆர், பதான் போன்ற படம் வெளியானது. இதில் எந்த தமிழ் கலைஞர்கள் நடித்தார்கள், எந்த தமிழ் தொழிலாளர்கள் பணியாற்றினார்கள்.

யாருக்கு குறுகிய மனப்பான்மை: தமிழ் திரைப்படங்களில் தமிழ் தொழிலாளர்களை பயன்படுத்துங்கள் என்று தான் நாங்கள் கோரிக்கை வைத்தோம் இதில் என்ன குறுகிய மனப்பான்மை இருக்கிறது. தமிழ் சினிமாவில் 40 சதவீதம் தெலுங்கு தொழிலாளர்கள் இருக்கிறார்கள், 20சதவீதம் மலையாளத் தொழிலாளர்கள், நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், தெலுங்கு படத்தில் எந்த தமிழ் டெக்னிஷியன்ஸ் மற்றும் நடிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா அப்போது யாருக்கு குறுகிய மனப்பான்மை இருக்கிறது.
உங்களுக்கு தகுதி இல்லை: மைக் கிடைத்துவிட்டது என்பதற்காக எதுவேண்டுமானாலும் பேசலாமா, தமிழ் படங்களில் தான் தெலுங்கு, மலையாள தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்கிறார்கள் இதனால், எங்களுக்கு அறிவுரை சொல்லும் தகுதி உங்களுக்கு இல்லை, இதே போன்று பேசிக்கொண்டே இருந்தால், வேறு விதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று ஆர்கே செல்வமணி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











