twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெப்சி திடீர் ஸ்ட்ரைக்- படப்பிடிப்புகள் முடங்கின!

    By Shankar
    |

    Movie Shooting spot
    சென்னை: பெப்சி தொழிலாளர்களின் திடீர் ஸ்ட்ரைக் காரணமாக இன்று அனைத்து படப்பிடிப்புகளும் முடங்கின.

    பெப்சி பொருளாளர் அங்கமுத்து சண்முகத்தை நேற்று சிலர் தாக்கிவிட்டனர். சினிமா டிரைவர் யூனியனை சேர்ந்தவர்கள்தான் தன்னை தாக்கியதாக அங்கமுத்து சண்முகம் குற்றம் சாட்டினார். பெப்சியின் மற்றொரு நிர்வாகி தனபாலும் தாக்கப்பட்டார்.

    பெப்சியில் அங்கம் வகிக்கும் கார் டிரைவர்கள் யூனியன் 2 பிரிவுகளாக செயல்படுவதாகவும் எனவே கார் டிரைவர் யூனியனுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என்று பெப்சி பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும், இதனால் தன்னை டிரைவர் யூனியனை சேர்ந்தவர்கள் தாக்கியதாகவும் அங்கமுத்து சண்முகம் போலீசில் புகார் தெரிவித்தார்.

    தங்கள் அமைப்பின் நிர்வாகிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து 'பெப்சி' தொழிலாளர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

    சென்னையில் கார்த்தி நடிக்கும் 'பிரியாணி', விஷால் நடிக்கும் 'பட்டத்துயானை' படப்பிடிப்புகள் நடந்தன. தொழிலாளர்கள் வராததால் இவ்விருபடப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது.

    இதுபோல் மேலும் 26 படப்பிடிப்புகள் இந்த ஸ்ட்ரைக்கால் பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பெப்சி தொழிலாளர்கள் இன்று காலை கோடம்பாக்கம் டைரக்டர்கள் காலனியில் ஒன்றுகூடி, நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் போட்டு போராட்டம் நடத்தினர்.

    English summary
    South Indian cinema's powerful employees body Fefsi's one day strike affected 28 movie shootings today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X