பெப்சி ஊழியர்கள் உண்ணாவிரதம்-சுத்தமாக முடங்கியது படப்பிடிப்புகள்

By Sudha

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சிக்கும் இடையிலான மோதலின் அடுத்த கட்டமாக பெப்சி தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.

தயாரிப்பாளர்களுக்கும், பெப்சிக்கும் இடையே சம்பள உயர்வு பிரச்சினையில் மோதல் வெடித்துள்ளது. திரைப்பட தொழிலாளர்கள் புதிய ஊதிய உயர்வை அறிவித்துள்ளனர். ஆனால் இதை தயாரிப்பாளர்கள் நிராகரித்து விட்டனர். இதனால் திரையுலகம் பிளந்து போயுள்ளது. படப்பிடிப்புகள் ஸ்தம்பித்துள்ளன.

பெப்சி தொழிற்சங்கத்துடன் உறவு முறிந்தது என்றும் தன்னிச்சையாக தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் பட அதிபர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது. முன்னணி நடிகர்களின் படப்பிடிப்புகள் நின்று போயுள்ளன.

2 வாரங்களாக படப்பிடிப்புகள் நடைபெறாமல் உள்ளது. இரு தரப்புமே பிடிவாதம் பிடித்து வருவதாலும், சமரச முயற்சிகளுக்குப் பலன் இல்லாததாலும் திரையுலகம் ஸ்தம்பித்துக் கிடக்கிறது.

இந்த நிலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, வடபழனியில் உள்ள இசை அமைப்பாளர்கள் சங்க அலுவலக வளாகத்தில் பெப்சி தொழிலாளர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. உண்ணாவிரதத்தை நடிகர் ராதாரவி தொடங்கி வைத்தார். அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத் தலைவர் கல்வேஷ் திவாரி தலைமை வகித்தார். பெப்சி தலைவர் ராமதுரை, செயலாளர் சிவா, பொருளாளர் சண்முகம் பங்கேற்றனர்.

இந்த உண்ணாவிரதத்தில் 23 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்தி இயக்குநர்கள் அமீர், ஜனநாதன், சண்டை மாஸ்டரும், இயக்குநரும், முன்னாள் பெப்சி தலைவருமான பெப்சி விஜயன் உள்ளிட்டோர் பேசினர்.

முன்னதாக எம்.ஜி.ஆர். சமாதி அருகே உண்ணாவிரதம் நடத்த அனுமதி கோரியிருந்தனர். ஆனால் காவல்துறை அனுமதி தராததால் இங்கு போராட்டம் நடந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X