ஓவர் குடி போதை.. வாகன சோதனையில் போலீசாரை எட்டி உதைத்த பெண் உதவி இயக்குனர்.. நண்பருடன் கைது!

By

சென்னை: குடிபோதையில் போலீசாரை உதைத்ததான் சினிமா பெண் உதவி இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

குடிபோதையில் போலீசாரிடம் சிக்கிய பெண் உதவி இயக்குனர்

லாக்டவுனுக்குப் பிறகு சென்னையில் மதுபானக் கடைகள், சொகுசு மதுபான விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன.

இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர் பகுதிகளில் இரவு நேரத்தில் மது குடித்துவிட்டு கார்களில் வேகமாக செல்வது பற்றி புகார் வந்தது.

வாகன சோதனை

வாகன சோதனை

இதையடுத்து போக்குவரத்து போலீசார் அங்கு ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை இரவு, நீலாங்கரை போக்குவரத்து ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான போலீசார், வாகன சோதனை நடத்தினர். அப்போது திருவான்மியூர் சவுத் அவென்யூ சாலையில் ஒரு கார் வேகமாக வந்தது.

அதிக மதுபோதை

அதிக மதுபோதை

அதை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அந்த காரில் இளைஞர் ஒருவரும் ஓர் இளம் பெண்ணும் அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் சரியாக பதில் சொல்லவில்லை.

உதவி இயக்குனர்

உதவி இயக்குனர்

பின்னர், காரை ஓட்டி வந்த இளைஞர், அடையாறு பகுதியைச் சேர்ந்த டோட்லா சேஷூ பிரசாத் (27) என்பதும் இளம்பெண் அடையாறு பகுதியை சேர்ந்த காமினி என்பதும் தெரியவந்தது. காமினி, பிரபல இயக்குனர் விஷ்ணுவர்த்தனிடம், உதவி இயக்குனராக பணி புரிகிறார்.

எட்டி உதைத்தார்

எட்டி உதைத்தார்

போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது, அந்தப் பெண்ணும் இளைஞரும் அவர்களை ஆபாசமாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னர் ஆய்வாளரை காலால் எட்டி உதைத்துள்ளார். இந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, ஆய்வாளர் மாரியப்பன் திருவான்மியூர் போலீசில் புகார் அளித்தார்.

தகராறு வீடியோ

தகராறு வீடியோ

போலீசார், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். காமினி, போதையில் போலீசாரிடம் தகராறு செய்து, தரக்குறைவாக பேசி, எட்டி உதைத்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X