twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்னும் 6 நாள்.. வருகிறார் லேடி சூப்பர் ஸ்டார்.. அடுத்தடுத்து ‘வுமன் சென்ட்ரிக்’படங்கள்!

    |

    சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பல்வேறு தடைகளுக்கு பிறகு வரும் 26-ந் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ராட்சசி, ஆடை என 2 'வுமன் சென்ட்ரிக்' படங்கள் திரையில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் மூன்றாவதாக களத்தில் குதிக்கிறார் நயன்தாரா.

    female centric films

    சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் கொலையுதிர் காலம் படம் ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

    வுமன் சென்ட்ரிக் படமான இதில் நடிகை பூமிகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை பூஜா எண்டெர்டெயின்மென்டுடன் இணைந்து, எக்ஸெட்ரா எண்டெர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.

    female centric films

    இந்நிலையில், கொலையுதிர்காலம் என்ற டைட்டிலுடன் படத்தை வெளியிடக்கூடாது என்று பாலாஜி குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தது.

    இந்த தடையை நீக்க கோரி தயாரிப்பாளர் மதியழகன் செய்த மனுவின் பிரகாரம், காப்புரிமை இல்லாத டைட்டிலை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த உரிமை உண்டு எனக்கூறி படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    female centric films

    பொங்கலுக்கே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய படம் பேட்ட, விஸ்வாசம் படங்களின் ரிலீசால் தள்ளி போனது. அதற்கடுத்து இருமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் படம் பல்வேறு காரணங்களால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இந்நிலையில் கொலையுதிர்காலம் ரிலீஸ் 26-ந் தேதி என படக்குழு அறிவித்துள்ளது.

    முன்பெல்லாம் எப்போதோ ஒன்று என வந்து கொண்டிருந்த சென்ட்ரிக் படங்களை மீண்டும் கொண்டு வந்தவர் நயன்தாராதான். இந்த மாதத்தில் மட்டும் ராட்சசி, ஆடை, தற்போது கொலையுதிர் காலம் என 3 வாரங்களில் 3 படங்கள் வெளியாகின்றன. ராட்சசி படத்தில் ஆசிரியர்கள் இழிவாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது. ஆடை படத்திற்கு சொல்லவே வேண்டாம். டீசர் முதல் ரிலீஸ் வரை எல்லாமே சர்ச்சை தான்.

    கொலையுதிர்காலம் பட ப்ரமோஷனில் தான் நயன்தாரா குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார் ராதாரவி. இதையும் தாண்டி அதிக அளவில் வுமன் சென்ட்ரிக் உருவாவது ஆரோக்கியமான விஷயம் தான்.

    English summary
    nayanthara's women centric films create ruckus in the field.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X