அச்சு அசல் கமலை வரைந்த ரசிகை.. விக்ரம் படத்திற்கு பிறகு இப்படி ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற பலர் நடித்த திரைப்படம் விக்ரம்.

கடந்த மாதம் மூன்றாம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பல வசூல் சாதனைகளையும் படைத்த விக்ரம் திரைப்படம். டிஸ்லி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் ஆகி உள்ளது.

வெற்றி கூட்டணி

வெற்றி கூட்டணி

நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், சூர்யா, சிவானி போன்ற பலர் நடித்த இந்த திரைப்படம் கடந்த மாதம் மூன்றாம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்திற்கு இசையமைத்தார் அனிருத்.

பல வருடங்களுக்கு பிறகு

பல வருடங்களுக்கு பிறகு

நடிகர் கமல்ஹாசனுக்கு இந்த படம் சிறந்த கம் பேக் படமாகவே அமைந்தது. மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு மிகப்பெரிய வரவேற்பை விக்ரம் திரைப்படம் கொடுத்துள்ளது. தற்போது முன்னணி இயக்குநர் ஆக இருந்து வரும் லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தின் மூலம் பல ரசிகர்களையும் பெற்றுள்ளார். விக்ரம் படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது.

சர்ச்சையான பாடல்

சர்ச்சையான பாடல்

விக்ரம் படத்தில் இடம் பெற்றுள்ள பத்தல பத்தல பாடல் கமலஹாசன் எழுதி பாடியினார். இந்த வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் நடிகர் கமலஹாசன். சூட்டிங் சமயங்களிலும் இரவு நேரத்தில் ஓயாத ஒர்க்கவுட்டுகளில் ஈடுபட்டு அயராது பாடுபட்டு நடித்துள்ளார் .4 வருடங்களுக்கு பிறகு வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 450 கோடிகளுக்கு மேல் வசூலைக் குவித்துள்ள இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கமலை கொண்டாடும் ரசிகர்கள்

கமலை கொண்டாடும் ரசிகர்கள்

ரசிகர்கள் தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் பல விஷயங்களை செய்து வருகின்றனர். கமல்ஹாசனின் ரசிகை ஒருவர் கமலின் ஓவியத்தை தத்துரூபமாக வரைந்து உள்ளார். இந்த ஓவியத்தை வரைய கிட்டத்தட்ட 60 மணி நேரம் ஆனதாகவும் கூறப்படுகிறது. இந்த ஓவியத்தை பார்த்த பலரும் இந்த ரசிகைக்கு வாழ்த்துக்கள் கூறி வருவதுடன் ,இந்த ஓவியத்தை கமலஹாசனிடம் ஒப்படையுங்கள் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். ஏற்கனவே கேரளாவை சேர்ந்த கமல்ஹாசன் ரசிகர் ஒருவர் நீர்மேல் ஓவியம் போட்டு அசத்தியதும் குறிப்பிடத்தக்கது. நீர்மேல் மிதக்கும் கமலஹாசன் உருவத்தை உருவாக்கியது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வந்தது. அதேபோல் இந்த ரசிகை வரைந்த ஓவியமும் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X