Leo Success Meet scam: விஐபி பாஸ் இருந்தும் உள்ளே விடமாட்றாங்க.. கொந்தளித்த விஜய் ரசிகை!
சென்னை: லியோ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியிலும் போலி பாஸ் சர்ச்சை வெடித்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது. ரசிகை ஒருவர் தான் விஐபி பாஸ் வைத்திருந்தும் உள்ளே விடவில்லை என கொந்தளித்துள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் இருந்து டிக்கெட் முறைகேடு பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கடந்த முறை வாரிசு இசை வெளியீட்டு விழாவிலும் டிக்கெட் வைத்து இருந்த நிலையிலும் சில ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அதே போன்றதொரு பிரச்சனை லியோ வெற்றி விழாவிலும் அரங்கேறி உள்ளது.
விஐபி பாஸ் இருந்தும் அனுமதியில்லை: விஜய் ரசிகை லியோ வெற்றி விழாவில் தளபதி விஜய்யை பார்க்க வேண்டும் என்பதற்காக விஐபி பாஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு நேரு ஸ்டேடியம் வந்துள்ளார். ஆனால், விஐபி பாஸ் முடிந்து விட்டதாகவும் உள்ளே இடமில்லை என அவரை விரட்டி அடித்துள்ளனர்.
நின்று கொண்டாவது பார்க்கிறேன் என்று அந்த ரசிகை சொன்ன நிலையிலும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாக பேட்டியளித்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.
கொந்தளித்த ரசிகை: கோல்டன் பாஸ் அல்லது சில்வர் பாஸ் வரிசையிலாவது தனக்கு இடம் வழங்க வேண்டும் என்றும் இல்லை என்றால் அவ்ளோதான் உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன். எதுக்கு எக்ஸ்ட்ரா பாஸ் விற்க வேண்டும் என அந்த ரசிகை கோபத்துடன் கொந்தளித்துள்ளார்.
மேலும், நேரு ஸ்டேடியம் உள்ள இடத்தையே விஜய் மக்கள் இயக்கத்தினர் டிராபிக் நெரிசல் மய்யமாக மாற்றிவிட்டதாகவும் புகார்கள் குவிந்து வருகின்றன. இன்னும் என்ன என்ன பிரச்சனைகள் வெடிக்கும் என்றே தெரியவில்லை என்கின்றனர். அனைத்தையும் மீறி சுமூகமாக விழா நடைபெற வேண்டும் என விஜய் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











