செத்துடுவேன் என மிரட்டிய ரசிகை: போலீசில் புகார் அளித்த வாரிசு நடிகர்
மும்பை: தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகை மீது பாலிவுட் நடிகர் வருண் தவான் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பாலிவுட்டில் பிரபலமான இளம் ஹீரோக்களில் வருண் தவானும் ஒருவர். அவர் டாப்ஸி, ஜாக்குலினுடன் சேர்ந்து நடித்த ஜுட்வா 2 படம் அண்மையில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது.
இந்நிலையில் வருண் தவானுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப்
ரசிகை ஒருவர் வருண் தவானுக்கு வாட்ஸ்ஆப்பில் ஏகப்பட்ட மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த வருண் அந்த ரசிகையின் எண்ணை பிளாக் செய்துவிட்டார்.

மிரட்டல்
எண்ணை பிளாக் செய்த பிறகு அந்த ரசிகையின் சார்பில் ஒருவர் வருணுக்கு போன் செய்து பேசியுள்ளார். நீங்கள் பதில் மெசேஜ் அனுப்பாவிட்டால் அந்த ரசிகை தற்கொலை செய்து கொள்வார் என்று அந்த நபர் தெரிவித்துள்ளார்.

புகார்
தற்கொலை மிரட்டல் அழைப்பு வந்ததை அடுத்து வருண் பந்த்ரா சைபர் செல்லில் புகார் அளித்துள்ளார். மேலும் சான்டாக்ரூஸ் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார்.

சுவிட்ச் ஆப்
வருண் தவான் புகார் குறித்து போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். வருணுக்கு போன் செய்தவரை தொடர்பு கொள்ள முயன்றால் சுவிட்ச் ஆப் என்று வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











