ஒரே தலைவலி.. தனுஷ் தொடர்ந்து இதே மாதிரி கதையிலேயே நடிக்கிறார்.. கேப்டன் மில்லரை கழுவி ஊற்றிய ரசிகை!
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12ம் தேதி வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தை பார்த்து விட்டு ரசிகை ஒருவர் அளித்த பப்ளிக் ரிவ்யூ தீயாக பரவி வருகிறது. ஹாலிவுட் லெவல் படம் என்று தனுஷ் ரசிகர்கள் மார்தட்டிக் கொண்டிருக்க கேவலமா இருக்கு படம் என அந்த ரசிகை வெளுத்து வாங்கி உள்ளார். மேலும், பல ரசிகர்களும் கேப்டன் மில்லர் படத்தை வச்சு செய்துள்ள வீடியோ காட்சிகள் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 4 தமிழ் படங்கள் வெளியாகின. கேப்டன் மில்லர், அயலான், மிஷன் பார்ட் 1 மற்றும் மெரி கிறிஸ்துமஸ். இந்த 4 படங்களில் அதிக திரையரங்குகளை ஆட்கொண்ட படங்கள் என்றால் அது கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்கள் தான். ஆனால், இரு படங்களுக்குமே கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தன.

வெறும் டுமீல் சத்தம்: படம் தொடங்கியது முதல் முடியுற வரை வெறும் டுமீல் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறது. தனுஷ் மற்றும் அவரது டீம் இணைந்துக் கொண்டு வெள்ளைக்காரர்களின் படைகளை வித விதமான நவீன ரக துப்பாக்கிகளை எல்லாம் வைத்துக் கொண்டு சுட்டு வீழ்த்துவது எல்லாம் வேடிக்கையாக உள்ளது என்றும் எங்கேயுமே நம்பகத்தன்மை படத்தில் இல்லை என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
கர்நாடகாவிலும் ஓடல: ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்திலும் சிவராஜ்குமாரை ஊறுகாய் போலவே இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பயன்படுத்தி உள்ளார். அவருக்கான ஒரு முக்கியமான ஹைலைட் காட்சி கூட வைக்காமல் கடைசியில் துப்பாக்கியுடன் நடக்கும் யுத்தத்தில் வெறும் கத்தியை எடுத்துக் கொண்டு வந்து அவர் சண்டை செய்வதே வேடிக்கையாக தான் உள்ளது என கலாய்த்து வரும் நிலையில், கர்நாடகாவில் சிவராஜ்குமார் ரசிகர்கள் கடுப்பாகி விட்டார்களாம்.

ஒரே மாதிரி படம் நடிக்கிறாரு தனுஷ்: கேப்டன் மில்லர் படத்தில் வயலென்ஸ் தவிர ஒன்றுமே இல்லை என்றும் தொடர்ந்து ஒரு 4 படங்கள் தனுஷ் ஒரே மாதிரி கதையில் தான் நடிக்கிறாரு. மேல் ஜாதி, கீழ் ஜாதி என சொல்லிக் கொண்டே வன்முறையை தூண்டி வருகிறார். அசுரன், கர்ணன், கேப்டன் மில்லர் என அனைத்து படங்களுமே ஒரே மாதிரி தான் உள்ளன. அனைத்து மக்களும் பார்க்கக் கூடிய படங்களை தனுஷ் கொடுப்பார் என நம்புகிறேன் என அந்த ரசிகை பேசியுள்ளார்.
ஒரே தலைவலி: ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை குண்டு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. தயவு செஞ்சு குடும்பத்துடன் படத்தை பார்க்க வேண்டாம். ஒரே தலைவலியா இருக்கு என்றும் அந்த பெண்மணி பேசியுள்ளார். அந்த பெண்மணியின் சமூகத்தை வைத்து தனுஷ் ரசிகர்கள் தற்போது அந்த பெண்மணிக்கு எதிரான பதிவுகளை போட்டு வருகின்றனர். இன்னொரு ரசிகர் தனுஷ் படத்தை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டித்தீர்த்துள்ளார்.
அடுத்தடுத்த பாகங்கள் வருமா?: கேப்டன் மில்லர் முதல் பாகமே வசூலில் பலத்த அடி வாங்கியதால் தான் சத்யஜோதி வசூல் கணக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். முதல் பாகத்திற்கே இந்த நிலைமை என்றால் அடுத்தடுத்த பாகங்கள் ஷூட்டிங் போக கூட வாய்ப்பே இல்லை என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











