அண்ணான்னு கத்திய ரசிகை.. கண்டுக்காத விஜய்.. விமான நிலையத்தில் வருத்தமாக பேசிய பெண்!
சென்னை: தனது சகோதரியை வழியனுப்ப வந்த இளம்பெண் நடிகர் விஜய்யை அண்ணா என அழைத்தும் அவர் திரும்பி பார்த்து கையசைக்காதது வருத்தமளிப்பதாக ரசிகை ஒருவர் பேட்டியளித்துள்ளார்.
கோட் படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் வெளியாகின. நடிகர் விஜய் விமான நிலையத்தில் மாஸ்க் அணிந்துக் கொண்டு எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியான முறையில் நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகின.

ரசிகர் ஒருவர் கைகொடுக்க வந்த நிலையில், அழகாக அவருக்கு போகிற போக்கிலேயே கையை கொடுத்து விட்டு விஜய் கிளம்பிச் சென்ற காட்சிகளையும் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
அமெரிக்காவில் கோட்: ரஷ்யாவில் கோட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தேர்தலை முன்னிட்டு சென்னைக்கு திரும்பினார். இந்நிலையில், மீண்டும் கோட் படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாட்டுக்கு நடிகர் விஜய் கிளம்பி போயுள்ளார்.
கேரள விமான நிலையத்தில் கூட்டம்: நடிகர் விஜய் கோட் படத்தின் படப்பிடிப்பை முன்னிட்டு கேரள விமான நிலையத்துக்கு வரப் போகிறார் என்கிற செய்தி கசிந்த நிலையில், கேரள விமான நிலையத்துக்கு வெளியே விஜய்யை வரவேற்க ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கூட்டமாக கூடிய காட்சிகள் வெளியாகி இணையத்தை திணறடித்தது. ஆனால், சென்னை விமான நிலையத்தில் நடிகர் விஜய் யாருக்கும் தெரியாமல் சத்தமே காட்டாமல் சைலன்ட்டாக அடுத்தடுத்து படப்பிடிப்புகளுக்கு செல்வதும் வருவதுமாக இருந்து வருகிறார்.
விமான நிலையத்தில் விஜய்: வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் கோட் படத்தில் நடித்து வருகிறார். இதுவரை படத்தின் 50 சதவீத டப்பிங்கையும் விஜய் முடித்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஜீ நிறுவனம் கோட் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை அதிகபட்சமாக 93 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக கூறுகின்றனர். இந்நிலையில், கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு துபாய்க்கு சென்றுள்ளார் நடிகர் விஜய். அங்கிருந்து அமெரிக்கா செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரசிகையை கண்டுக்காத விஜய்: கேரளாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் மற்றும் ரசிகைகளை சந்தித்த நடிகர் விஜய் சென்னை விமான நிலையத்தில் ஒரே ஒரு ரசிகை அண்ணா.. விஜய் அண்ணா என அழைத்தும் அவர் கண்டுக்கவே இல்லாததால் மன வருத்தம் அடைந்து பேட்டி கொடுத்துள்ளார்.
சிஎம் ஆகணும்: தளபதியின் தீவிர ரசிகை தான் என்றும் தளபதி விஜய் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்வார். 2026ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு அவர் சிஎம் ஆவார். எங்க குடும்பம் மொத்தமுமே அவருக்குத்தான் ஓட்டுப் போடும். அக்காவை வழியனுப்ப வந்திருந்தேன். விஜய்யை அடையாளம் கண்டு கொண்டதும் கூப்பிட்டேன். ஆனால், அவர் திரும்பி பார்க்காதது வருத்தமளிக்கிறது என வர்மிளா எனும் அந்த ரசிகை வருத்தத்துடன் பேசியுள்ளார். அந்த பெண் தூரத்தில் இருந்தும் கண்ணாடிக்கு வெளியே நின்றும் கத்தியதால் தான் விஜய்க்கு கேட்டிருக்காது என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், நடிகர் விஜய்யை ஆரம்பத்தில் விஜய் என அவர் அழைத்திருந்தார். அதன் பின்னர் அண்ணா என அழைக்க பக்கத்தில் இருந்தவர்கள் சொல்ல, அதன் பின்னர் தான் விஜய் அண்ணா என அழைத்தார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு கமெண்ட் போட்டு வருகின்றனர்.
ஒரு வாரத்தில் முடியும் சூட்டிங்: கோட் படத்தின் சூட்டிங் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடைந்து விடும் எனக் கூறுகின்றனர். நடிகர் விஜய்யின் போர்ஷனை முடித்து விட்டு இறுதிகட்ட படப்பிடிப்புகளையும் போஸ்ட் புரொடக்ஷன்களையும் கவனித்து செப்டம்பர் 5ம் தேதி படத்தை வெளியிட வெங்கட் பிரபு தீவிரமாக உழைத்து வருகிறார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











