AR Rahman concert: அய்யோ.. கையெல்லாம் நடுங்குது.. கண்ட இடத்துல கை வச்சி.. ச்சீ.. கதறிய பெண்கள்

சென்னை: கூட்ட நெரிசல் காரணமாக இசை நிகழ்ச்சியை ரசிக்க முடியாமல் திரும்பிச் சென்ற ரசிகர்களுக்கான பணம் திருப்பித் தரப்படும் என ஏ.ஆர். ரஹ்மான் சர்வ சாதாரணமாக சொல்லி விட்டார்.

ஆனால், பாதுகாப்பு அம்சங்களை செய்யத் தவறியதன் விளைவாக பல இளம் பெண்கள் மீது கூட்ட நெரிசல் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில அயோக்கியனுங்க கண்ட இடத்துல கை வச்சி அத்துமீறியதற்கு ஏ.ஆர். ரஹ்மான் என்ன செய்யப் போகிறார் என பெண்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Female fans faced harrassement at AR Rahman concert mishaps shocks everyone

தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகளவில் பல பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பெண்கள் எந்தவொரு பயமுமின்றி சென்று வரக் காரணமே நிகழ்ச்சிக்கு ஏற்ப பாதுகாப்பு அம்சங்கள், பெண் போலீஸார்கள் குவிப்பு என அனைத்தும் இருக்கும் என்கிற நம்பிக்கையில் தான் சென்றனர். ஆனால், ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியை நடத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்த குளறுபடியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என்ன பதில் என நெட்டிசன்கள் சாட்டையை சுழற்றி உள்ளனர்.

கையெல்லாம் நடுங்குது என கதறும் பெண்: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண சென்ற ஒரு பெண்ணை சில இரக்கமற்ற காம வெறியர்கள் கண்ட இடங்களில் கை வைத்து மானபங்கம் செய்த நிலையில், தனது கையெல்லாம் நடுங்குகிறது என அந்த பெண் வெளியிட்ட வீடியோவை நெட்டிசன்கள் ஷேர் செய்து ஏ.ஆர். ரஹ்மானிடம் இதற்கு என்ன பதில் சொல்லப் போறீங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அசிங்கமா இல்லை அயோக்கியனுங்களா: இளம் பெண்களை கூட்ட நெரிசல் காரணமாக பயன்படுத்திக் கொண்டு அத்துமீறி அந்தரங்க பகுதிகளில் தொட்டு கேவலமாக நடந்து கொள்ளும் அயோக்கியனுங்களா உங்களுக்கெல்லாம் அசிங்கமா இல்லை என இளம் பெண்கள் மனம் வெதும்பி திட்டித் தீர்த்து வருகின்றனர்.

ஏ.ஆர். ரஹ்மான் ஏற்கனவே கோவையில் நடந்த நிகழ்வின் போதும் இதே ACTC ஈவண்ட்ஸ் மூலம் நடத்திய நிகழ்ச்சியே சிக்கலை சந்தித்த நிலையில், இந்த முறை சுத்தமாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யாமல் 46 ஆயிரம் பேரை எப்படி அழைத்து நிகழ்ச்சி நடத்தலாம் என பெண்கள் விளாசி வருகின்றனர்.

Female fans faced harrassement at AR Rahman concert mishaps shocks everyone

காசு கொடுத்தா போதுமா: 90 சதவீதம் நிகழ்ச்சி சூப்பரா போச்சு, 10 சதவீதம் தான் தோல்வி என்றும் பணத்தை திருப்பித் தருகிறேன் என ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட் போட்டுள்ளாரே காசு திருப்பி கொடுத்தா போதுமா? இந்த பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என்ன பதில் வச்சிருக்கீங்க என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X