கொஞ்சம் கூட திருந்தாத ரவுடி பேபி..அந்தரங்க வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டல்.. பெண் போலீசில் புகார்!

கொஞ்சம் கூட திருந்தாத ரவுடி பேபி..அந்தரங்க வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டல்.. பெண் போலீசில் புகார்!

சென்னை: அந்தரங்க வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டியதாக ரவுடி பேபி மீது பெண் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ரவுடி பேபி என்கிற பெயரில் டிக் டாக்கில் வீடியோவை வெளியிட்டு பிரபலமானவர் தான் ரவுடி பேபி சூர்யா. அடிக்கடி ஆபாசமாக பேசி யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு பல சர்ச்சைகளில் சிக்கினார்.

female youtuber complaint against rowdy baby surya and chikkandhar

இதையடுத்து, கடந்த ஆண்டு, இளம்பெண் ஒருவரை ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக தகாத முறையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவருடைய நண்பர் சிக்கா என்கிற சிக்கந்தரையும் கைது செய்தனர்.

ரவுடி பேபி சூர்யா மீது புகார்: சிறையில் இருந்த ரவுடி பேபி சூர்யா,கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ஜாமினில் வெளியில் வந்த நிலையில், மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார். ரவுடி பேபி சூர்யாவும் அவரது காதலன் சிக்கந்தரும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் யூடியூபர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

ஆபாச பேச்சு: இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த பெண், தனது பெயர் சித்ரா என்றும், தாம் யூடியூப் சேனல் நடத்தி வருகிறேன், அதோடு, குழந்தைகளுக்காகவும் பொதுமக்களுக்காகவும் சேவை செய்து வருகிறேன். யூடியூபில் ரவுடி பேபி சூர்யா, சிக்கா, சாதனா, திவ்யா கல்லச்சி போன்றவர்கள் பதிவிடும் வீடியோ குழந்தைகளையும் மிகவும் பாதிக்கிறது என்பதற்காக நான் அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்தேன்.

மிரட்டல்: இதை நான் கண்டித்ததால், தொலைபேசி மூலமாக, யூடியூப் சேனல் மூலமாக என்னை மிரட்டுகின்றனர். சிக்கந்தர் யூடியூபில் என்னை கேலி செய்து பேசுகிறார். மேலும், எனது அந்தரங்க போட்டோவை கோவை தமிழன் என்கிற சேனலில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுகின்றனர். இதனால் சிக்கந்தர் மீதும் ரவுடி பேபி மீதும் சட்டப்படி நடிவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக சித்ரா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X