உருவக்கேலி, ஆபாசப்பேச்சுகள், சுத்தமின்மை, ஐக்யூ லெவல் குறைவு.. இதுதான் பிக் பாஸ் போட்டியாளர்களா?

சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரம் ஒளிபரப்பாகி வரும் நிலையில், அதில், ஏகப்பட்ட உருவக்கேலி, ஆபாசப் பேச்சுக்கள், பெண்களை இழிவாக பேசுதல் என பல விஷயங்கள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்து வருகின்றன.

படுக்கையறை, பாத்ரூம் பகுதி, ஸ்மோக்கிங் ரூம் என போட்டியாளர்கள் ஒவ்வொரு இடத்திலும் செய்யும் செயல்கள் எந்தவொரு எடிட்டும் செய்யப்படாமல் இருக்கும் நிலையில், பிரபலங்களின் நடத்தை இப்படி இருக்கிறதே என்கிற கேள்விகளும் புகார்களும் கிளம்பி உள்ளன.

ஒடிடி தளத்தில் சென்சார் இல்லை என்பதால் அவர்கள் அடிக்கும் கூத்துக்களுக்கு எந்தவொரு கடிவாளமும் இன்றி காட்டப்படுகிறது.

சண்டை போடவே

சண்டை போடவே

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சண்டை போடவே போட்டியாளர்களை கூட்டி வந்தது போல இருக்கிறது என ரசிகர்கள் ஃபீல் செய்து வருகின்றனர். யாராவது ஒருவர் சண்டை போட்டால் பரவாயில்லை. களமிறங்கி உள்ள அனைவரும் பிரச்சனை பண்ணும் விதமாக பேசுவதால் என்டர்டெயின்மென்ட்டுக்கு இடமின்றி எரிச்சலை கிளப்புவதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

உருவக்கேலி

உருவக்கேலி

விஜய் டிவியில் காமெடி எனும் பெயரில் தொடர்ந்து உருவக்கேலி தான் செய்யப்பட்டு வருவதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் உருவக்கேலி பிரச்சனை தலைவிரித்து ஆடி வருவதாக கிரைம் ரேட் கூடிக் கொண்டே போகிறது. சுரேஷ் சக்கரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், வனிதா எல்லாம் அசால்ட்டாக இந்த விஷயத்தை செய்வதாக கூறி வருகின்றனர்.

ஆபாசப்பேச்சுகள்

ஆபாசப்பேச்சுகள்

ஜூலியை பார்த்து பாலாஜி முருகதாஸ் தாலியை அறுக்காதே என்று கூறியது, வனிதா காபி கேட்க சுரேஷ் தாத்தா அதை வைத்து அசிங்கமாக கிண்டல் செய்தது என ஏகப்பட்ட ஆபாசப் பேச்சுகளும் பிக் பாஸ் வீட்டில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன என்கிற குற்றச்சாட்டுக்களையும் நெட்டிசன்கள் முன் வைத்து வருகின்றனர்.

டாமினேஷன்

டாமினேஷன்

சில போட்டியாளர்களை வீக்கென நினைத்துக் கொண்டு இருக்கும் சில போட்டியாளர்கள் மற்றவர்களை டாமினேட் செய்வது போல அதிகாரம் செலுத்துவது போல பேசுவதும் பிக் பாஸ் வீட்டில் அதிகமாக இடம்பெற்று வருகிறது. ஒரு மணி நேர ஷோ என்றால் இவர்கள் பண்ணும் அட்டகாசம் எல்லாம் மறைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிகளவில் பிக் பாஸ் போட்டியாளர்கள் எக்ஸ்போஸ் ஆகி வருகின்றனர்.

சுத்தமின்மை

சுத்தமின்மை

காலையில் எழுந்து பல் துலக்கி, குளித்து விட்டு ரெடியாகும் பழக்கம் இல்லாமல், ரொம்ப மோசமாக சில போட்டியாளர்கள் நடந்து கொள்வது ரசிகர்களை ரொம்பவே இரிடேட் ஆக்கி வருகிறது. ஷாரிக் செய்த சில செயல்கள் எல்லாம் ரசிகர்களை ரொம்பவே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல் துலக்குவது, பாத்ரூம் போவது என அனைத்தையும் காட்டினால் இந்த பிரச்சனை வரத்தானே செய்யும் என்றும் போட்டியாளர்களின் ரசிகர்கள் முட்டுக் கொடுத்து வருகின்றனர்.

ஐக்யூ லெவல் குறைவு

ஐக்யூ லெவல் குறைவு

தாமரை செல்வி போலவே மற்ற போட்டியாளர்களும் பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க்கையே புரிந்து கொள்ளாமல் ஐக்யூ லெவல் குறைவானவர்களை போல விளையாடி வருவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. எந்தவொரு டாஸ்க் கொடுத்தாலும், அதற்கு நேர் எதிராகவே செயல்படுவதையே போட்டியாளர்கள் செய்து வருகின்றனர் என்றும் பிரஸ்மீட் டாஸ்க்கை பலரும் கையாண்ட விதம் இவர்கள் ஏன் இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள்? என்கிற கேள்வியை எழுப்புகிறது என்றும் திட்டி வருகின்றனர்.

Recommended Video

Bigg Boss Ultimate Day 2:Julie பற்றி யாருக்கும் தெரியாத முகம் | மாறிய கண்ணோட்டம்
கமல் கண்டுப்பாரா

கமல் கண்டுப்பாரா

ஒரு மணி நேர ஷோவே அவர் பார்க்காமல் டாக் பேக்கில் சொல்வதை வைத்து ஷோ நடத்துகிறார் என குற்றச்சாட்டுகள் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் எழுந்து வந்த நிலையில், தற்போது 24 மணி நேரம் நடப்பதை எல்லாம் எப்படி பார்த்து விட்டு என்ன பஞ்சாயத்தை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X