சர்ச்சையை கிளப்பிய ஜெய் பீம் சீன்.. நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக திரும்பிய நெட்டிசன்கள்!

சென்னை: சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள், பிரபலங்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி வரும் நிலையில், அந்த படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்த ஒரு காட்சி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சில நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில் ஒடிடி வெளியீடாக இன்று வெளியாகி உள்ள படம் ஜெய்பீம்.

இருளர் இன மக்களுக்கு எதிராக தொடரப்பட்ட நிஜ வழக்கை அடிப்படையாக கொண்டு புனைவுடன் உருவாகி உள்ள இந்த படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பிரகாஷ் ராஜ் மிரட்டல்

பிரகாஷ் ராஜ் மிரட்டல்

எந்த துறையிலும் நல்லவங்களும் இருப்பாங்க கெட்டவங்களும் இருப்பாங்க என்றும் மனசாட்சிக்கு படி மனுஷன் நடக்க வேண்டும் என்றும் ஏகப்பட்ட பாடங்களை ஜெய்பீம் திரைப்படம் கற்றுக் கொடுக்கிறது. சில போலீசார் செய்த லாக்கப் டெத்தை நேர்மையான காவல் அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ் தீர விசாரித்து நீதிக்கு துணையாக இருக்கும் நடிப்பில் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளார். ஆனால், ஒரு 29 நொடி காட்சி அவருக்கு எதிரான விவாதங்களை சமூக வலைதளத்தில் கிளப்பி இருக்கிறது.

எந்த சீன்

எந்த சீன்

திருட்டு நகையை வாங்கிக் கொண்டு போலீசாரிடம் உண்மையை மறைக்க இந்தியில் பேசும் நபரை ஜெய்பீம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள பிரகாஷ் ராஜ் அறையும் காட்சி தவறாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக சில நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தி திணிப்புக்கு எதிராக

இந்தி திணிப்புக்கு எதிராக

சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தில் வரும் அந்த காட்சி இந்தி திணிப்புக்கு எதிரான காட்சி என சில நெட்டிசன்கள் கொண்டாட ஆரம்பித்த நிலையில், அதே காட்சி இந்தி பேசுபவர்களுக்கு எதிரான காட்சி என்கிற கண்ணோட்டத்தையும் கண்டனத்தையும் சில நெட்டிசன்கள் கிளப்ப வழி அமைத்து விட்டது.

கட் பண்ணனும்

கட் பண்ணனும்

ஜெய் பீம் படத்தில் சொன்ன அத்தனை நல்ல விஷயத்தையும் விட்டு விட்டு எங்கே குறையை கண்டுபிடிக்கலாம் என நினைத்த சிலர் ஜெய் பீம் படத்தை பார்த்து விட்டு நெஞ்சே வெடித்து விட்டது. இந்தி பேசும் நபரை எப்படி அறையலாம். அந்த காட்சியே தேவையில்லை கட் பண்ணுங்க என ட்வீட் போட்டு வருகின்றனர்.

இந்தி டப்பிங்கில்

இந்தி டப்பிங்கில்

ஜெய் பீம் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது. தமிழில் பேசு, தெலுங்கில் பேசு என வசனம் வைத்த இயக்குநர் இந்தி டப்பிங்கில் உண்மையை சொல்லு என வசனம் வைத்துள்ளது ஏன்? ஒரு 29 நொடி காட்சியில் இப்படி பண்ணலாமா? என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Recommended Video

Jai Bhim Review Tamil | Surya | 2D | Manikandan | Lijomol jose | yessa? bussa? | Filmibeat Tamil
பிரகாஷ் ராஜுக்கு எதிராக

பிரகாஷ் ராஜுக்கு எதிராக

இந்திக்கு எதிரான பிரகாஷ் ராஜின் நிலைப்பாடு தான் அந்த காட்சியின் மூலம் வெளிப்பட்டு இருக்கிறது என நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக ஹாஷ்டேக் உருவாக்கி அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர். ஜெய் பீம் படத்தில் பிரச்சனையை கிளப்ப வேறு எதுவும் கிடைக்காத நிலையில், இப்படி செய்றாங்க என சூர்யா ரசிகர்கள் பொங்கி வருகின்றனர்.

இந்தி பேசுவதற்கு எதிரானது அல்ல

இந்தி பேசுவதற்கு எதிரானது அல்ல

போலீஸ்காரரிடம் இருந்து தப்பிக்க இந்தியை பயன்படுத்துபவரை தான் காவல் அதிகாரியாக நடித்துள்ள பிரகாஷ் ராஜ் அறைந்து அவரை தமிழில் பேச சொல்கிறார். இந்த காட்சி இந்தி பேசுவதற்கு எதிரான காட்சி அல்ல என்றும் தவறாக யாரும் இதை திரிக்க வேண்டாம் என்றும் பல ரசிகர்கள் அந்த காட்சி குறித்து விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X