தனுஷை பார்த்து இவரா ஹீரோன்னு சந்தேகமா என்கிட்ட கேட்டாங்க.. நடிகை சோனியா அகர்வால்!

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால்

இப்பொழுது குணச்சித்திர வேடங்களில், தொலைக்காட்சி தொடர்களில் பிஸியாக நடித்து வருகிறார்

இந்த நிலையில் சோனியா அகர்வால் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த நேர்காணலில் தனுஷை பார்த்து இவரா ஹீரோ என என்னிடம் கேட்டாங்க என்று கூறியுள்ளார்.

காதல் கொண்டேன்

காதல் கொண்டேன்

செல்வராகவன் தனுஷ் கூட்டணிக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே மிகப்பெரிய எதிர்பார்ப்பு கூடிய வரவேற்பு உள்ளது. அதற்கு காரணம் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதுதான்.துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என இவர்களது கூட்டணியில் வெளியான அனைத்து படங்களும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றன.

காதலை புது விதமான கோணத்தில்

காதலை புது விதமான கோணத்தில்

இந்த நிலையில் தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் 2003ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதல் கொண்டேன். இயக்குனர் செல்வராகவனை பொருத்தவரையிலும் காதல் கதைகளையே மிக யதார்த்தமான முறையில் எடுக்கக் கூடியவர். அந்த வகையில் உண்மைக்கு மிக அருகில் இருக்கின்றவாரு காதல் கொண்டேன் படத்தில் காதலை புது விதமான கோணத்தில் கூறியிருப்பார்.

குணச்சித்திர வேடங்களிலும்

குணச்சித்திர வேடங்களிலும்

தெலுங்கில் நீ பிரேமாகை, கன்னடத்தில் சன்டு உள்ளிட்ட படங்களில் நடித்து திரைத்துறையில் அறிமுகமான சோனியா அகர்வால் தமிழ் சினிமாவிற்கு காதல் கொண்டேன் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சக்சஸ், மதுர, கோவில், 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, ஒரு நாள் ஒரு கனவு,திருட்டுப் பயலே, புதுப்பேட்டை, வானம், ஒரு நடிகையின் வாக்குமூலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்தான பிறகு திரைப்படங்களில் சரிவர கவனம் செலுத்த முடியாமல் இப்பொழுது படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் சீரியல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்

தனுஷை பார்த்து இவரா ஹீரோ

தனுஷை பார்த்து இவரா ஹீரோ

இப்போது பஹீரா, காதலை தேடி நித்யா நந்தா, வார்டு 126 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சோனியா அகர்வால் காதல் கொண்டேன் படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது அம்மாவும் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார். அப்பொழுது தனுஷை பார்த்துவிட்டு இவர்தான் ஹீரோவா என சந்தேகத்துடன் கேட்டதாக அந்த பேட்டியில் சோனியா அகர்வால் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X