லியோவில் விக்ரம் தொடர்பு இருக்குமா? ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐந்து விஷயங்கள்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள லியோ திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக உள்ளது.

இதில், விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலி கான், மேத்யூ தாமஸ் மற்றும் சாண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

லியோ படம் ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், படம் பற்றி ரசிகர்களுக்கு நிறைய கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் உள்ளன. அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

few things that fans are anticipating and waiting to watch in the film leo

லியோ-விக்ரம் தொடர்பு இருக்குமா: லோகேஷ் கனகராஜ் இயக்கிய மற்ற படங்களைப்போல, லியோ படத்தில் விக்ரம், டில்லி, ரோலக்ஸ், அமர் என அனைவரும் அதே தோற்றத்தில் நடிக்கிறார்களா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும், நடிகை வசந்தி ஏஜெண்ட் டினாவாக நடிக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளதால், லியோ மற்றும் விக்ரம் இடையேயான தொடர்பு எப்படி இருக்கும் என்று பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

சஸ்பென்ஸ் என்ன: அதே போல, விஜய், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் தவிர, அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோரின் கதாபாத்திரங்கள் என்ன என்பது இன்னும் சஸ்பென்ஸாகவே உள்ளது. மேலும், இயக்குநர் அனுராக் காஷ்யப் நடித்த கேமியோ ரோல் என்ன என்பது தெரியவில்லை அதையும் ரகசியமாகவே வைத்து இருக்கிறார் லோகேஷ்.

LCU இருக்கா: லியோ திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் இருக்கா இல்லை என்பது தெரியவில்லை. பல ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லோகேஷ் இதுகுறித்த கேள்விக்கு பதில் சொல்லாமல் மழுப்பி இருப்பதால், படத்தில் LCU இருக்கா என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். படத்தில் போதைப்பொருள் மற்றும் வன்முறை எப்படி கையாளப்படும் என்பது தெரியவில்லை.

த்ரிஷா ரோல் என்ன: லோகேஷ் கனகராஜின் மற்ற படங்களில் கதாநாயகி இறந்துவிடுவார்கள் என்பதால், லியோ படத்திலும், த்ரிஷாவின் பாத்திரமும் பாதியில் காணாமல் போய்விடுமா என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். ஆனால், இந்த படத்தில், த்ரிஷா இறக்க மாட்டார் என்று முன்பே லோகேஷ் உறுதிப்படுத்தி இருப்பதால், த்ரிஷாவின் பாத்திரம் எப்படி இருக்கும் என்பதை திரையில் காண பேன்ஸ் வெயிட்டிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X