மனிதர் உணர்ந்து கொள்ள.. இது மனித காதல் அல்ல.. FIFAவில் மெஸ்ஸிக்காக ஒலித்த குணா பட பாடல்.. வேற லெவல்!

சென்னை: உலக அளவில் அதிக நாடுகளில் விளையாடப்படும் விளையாட்டு, அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு என்றால் அது கால்பந்துதான். ஒவ்வொருமுறை உலகக் கோப்பை நடைபெறும்போதும், கிட்டத்தட்ட அதில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை என்பது சிலநேரங்களில் அதிகரிக்கும், சில நேரங்களில் குறையும். ஆனால் கால் பந்து போட்டி மீதான விருப்பமும் ஆர்வமும் ரசிகர்கள் தொடங்கி விளையாட்டு வீரர்கள் வரை யாருக்குமே குறைந்ததில்லை.

கடையாசியாக கால்பந்து உலகக் கோப்பை நடைபெற்ற ஆண்டு 2022. கத்தார் நாட்டில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பை போட்டிதான் 22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி. இந்த உலகக் கோப்பை தொடங்கும்போதே பெரும்பாலான ரசிகர்கள் மனதில் இருந்தது, கோப்பையை போர்ச்சுக்கல் அல்லது அர்ஜெண்டினா அணி வெல்ல வேண்டும் என நினைத்தார்கள். காரணம் அர்ஜெண்டினா அணியில் இருந்த மெஸ்ஸி, போர்ச்சுகல் அணியில் இருந்த ரொனால்டோ ஆகியோருக்காகத்தான். இவர்கள் இருவருமே இந்த சீசனில் களமிறங்கிய ஸ்டார் ப்ளேயர்கள் மட்டும் இல்லாமல், வயதான வீரர்களும் கூட.

messi kamalhaasan ilayaraaja

Image Courtesy : FIFA World Cup Instagram Page

அடுத்த உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் விளையாடுவார்களா மாட்டார்களா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. போர்ச்சுகல் அணி சிறப்பாக முன்னேறி வந்தபோது, அணியின் பயிற்சியாளரின் அரசியலால், ரொனால்டோவின் உலகக் கோப்பை கனவு அந்த ஆண்டு தகர்ந்தது. ஆனால் மெஸ்ஸிக்கு அர்ஜெண்டினா அணி சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தது.

messi kamalhaasan ilayaraaja

மெஸ்ஸி - எம்பாப்வே: இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவும் பிரான்ஸ்ஸும் மோதிக்கொண்டது. இந்தப் போட்டியில், பிரான்ஸ் அணியில் க்ளியன் எம்பாப்வே என்ற இளம் வீரர், ஒட்டுமொத்த அர்ஜெண்டினா அணிக்கும் தண்ணீர் காட்டிக் கொண்டு இருந்தார். இறுதியில் அர்ஜெண்டினா அணியும் பிரான்ஸ் அணியும் 3 - 3 என்ற நிலையில் இருந்தனர். அதன் பின்னர், பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-3 என்ற கணக்கில் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணி கோப்பையை வென்றது.

messi kamalhaasan ilayaraaja

எமோஷன்: அர்ஜெண்டினா அந்த உலகக் கோப்பையை வென்று, 2 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து, நேற்று அதாவது டிசமர் 18ஆம் தேதி, ஃபிஃபா உலக்கக் கோப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உலகக்கோப்பையை வென்றபோது அர்ஜெண்டினா அணி வீரர்களின் எமோஷன்ஸ் மற்றும் ரசிகர்களின் ஆரவாரம் ஆகியவற்றைத் தொகுத்து ஒரு ரீல்ஸாக வெளியிடப்பட்டுள்ளது.

messi kamalhaasan ilayaraaja

குணா பட பாடல்: அந்த ரீல்ஸ்க்கு கமல்ஹாசன் நடிப்பில், வெளியான குணா படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் உருவான, கண்மணி அன்போடு காதலன் என்ற பாடலில் வரும் வரிகள் பின்னனியில் இசையாக சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல... அதையும் தாண்டி.. புனிதமானது என்ற வரிகள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வீடியோவுக்கு கேப்ஷனாகவும் அந்த வரிகளே எழுதப்பட்டுள்ளது.

ரசிகர்கள்: இதனைப் பார்த்த தமிழ் ரசிகர்கள், எங்கும் இளையராஜா, தமிழ்தான் உலகின் மூத்த மொழி, சௌத் அட்மின், தமிழ் என மகிழ்ச்சியோடு கமெண்ட் செய்து வருகினேறனர். மேலும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நேரிலோ அல்லது தொலைக்காட்சியில் நேரலையில் பார்த்த ரசிகர்களும் கூட ஒப்புக்கொள்வார்கள், மெஸ்ஸிக்கு இந்தப் பாடல் கச்சிதமாகப் பொருந்திப் போகும் என. குறிப்பாக ஆட்டநாயாகன விருதினை வாங்கிய பின்னர், மைதானத்தின் நடுவே வைக்கப்பட்டிருந்த உலகக்கோப்பையை, குழந்தையைப்போல், தொட்டு, அதன் உச்சியில் மெஸ்ஸி முத்தம் வைத்தது எல்லாம், காலத்துக்கும் பேசப்படும். அடுத்த உலகக் கோப்பை வரும் 2026ஆம் ஆண்டு கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.

messi kamalhaasan ilayaraaja

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X