இந்தக் கொடுமைய என்னானு சொல்ல.. ’90 எம் எல்’க்காக ஆவேசமாக அடித்துக் கொண்ட ‘அங்கிள், ஆன்டி’!

Recommended Video

90 ML Audience Review: 90 ML மட்டமான சரக்கு ரசிகர்கள் விமர்சனம்- Filmibeat Tamil

சென்னை: ஓவியா நடித்த 90 எம் எல் படம் தொடர்பாக தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் அப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான அனிதா உதீப் சமூகவலைதளம் வாயிலாக காரசாரமாக பதிவு மோதல் நடத்தியுள்ளனர்.

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள '90 எம்.எல்' படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரிலீசானது. சென்சாரில் 'ஏ' சான்றிதழ் கிடைத்த இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஆதரவை விட எதிர்ப்புகளே இப்படத்திற்கு அதிகம்.

ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் ரிலீசானபோது, அதனை தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

நஞ்சை விதைக்காதீர்கள்:

நஞ்சை விதைக்காதீர்கள்:

இந்நிலையில், 90 எம் எல் படம் பற்றிய ஒரு விமர்சனத்தைப் பதிவிட்டு, `90 எம்.எல்' திரைப்படம் இந்தச் சமூகத்தை சீரழிக்கிறது. சமூகத்தின் மேல் அக்கறை வையுங்கள். நீங்கள் பணம் சம்பாதிக்க இளம் தலைமுறையினரிடம் நஞ்சை விதைக்காதீர்கள்" என புதிதாக அவர் ஒரு டிவீட் வெளியிட்டுள்ளார்.

டியர் அங்கிள்:

தனஞ்செயனின் இந்த டிவீட்டைப் பார்த்து கோபமடைந்த அனிதா உதீப், அதற்குப் பதிலடி தரும் விதமாக, "அங்கிள், சமூக கருத்து சொல்லும்படியான ஆபாச பாடல்களைக் கொண்ட 'சந்திரமௌலி' படத்தை ஒன்றும் நான் இயக்கவில்லை" என தனது பதிவில் தெரிவித்திருந்தார்.

வல்கர் இல்லை:

வல்கர் இல்லை:

இந்தப் பதிவைப் பார்த்த தனஞ்செயன், "எனக்குப் புரிகிறது ஆன்டி. ஆனால், ஒரு பாடலை இயக்குவது இயக்குநரின் முடிவு. நான் இந்த மாதிரி பாடல்கள் வேண்டும் என்று ஒருபோதும் கேட்பதில்லை. இது கிளாமராக இருக்கிறதே தவிர வல்கராக இல்லை.

தவறான ஒப்பீடு:

தவறான ஒப்பீடு:

இந்தப் பாடல் பல பாராட்டுகளை பெற்றது. அதனால்தான் இதற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்தது. உங்கள் படத்தைப்போல் `ஏ' சான்றிதழ் இல்லை. தவறாக ஒப்பிடாதீர்கள்" என்று மற்றொரு டிவீட் வெளியிட்டார்.

ப்ளீஸ் ஓடாதீங்க:

ப்ளீஸ் ஓடாதீங்க:

இறுதியில், "சார் உங்களுடன் விவாதிக்கிறதே போர் அடிக்குது. கொஞ்சம் சுவாரஸ்யமாகவோ ஸ்மார்ட்டாகவோ சொன்னால் இன்னும் உற்சாகமாக இருக்கும்" எனப் பதிவு வெளியிட்டார் அனிதா. ஆனால் அதற்கு தனஞ்செயனிடம் இருந்து பதில் வராததால், ``ஓடாதீங்க ப்ளீஸ். உங்களை வெச்சு இன்னும் கொஞ்சம் காமெடி பண்ணலாம்னு இருக்கேன்" என்று டிவீட் செய்துள்ளார் அவர். இப்படியாக டிவிட்டர் வாயிலாக வாக்குவாதத்தில் இருவரும் ஈடுபட, இவர்களது பதிவுகளை வைத்து ரசிகர்களும் தங்களுக்குள் கருத்து மோதலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X