Veera Dheera Sooran: விக்ரம் ரசிகர்களிடையே அடிதடி.. விரட்டி அடித்த போலீஸ்.. ஒருவருக்கு மண்டை உடைப்பு

ராமநாதபுரம்: விக்ரம் நடித்து இன்று வெளியாக இருந்த வீர தீர சூரன் படம் இன்று வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஏற்கனவே படத்தை பார்க்க முன்பதிவு செய்த ரசிகர்கள் தியேட்டர் வாசலில் நின்று கொண்டு திரையரங்க உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ரசிகர்களுக்கு மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டது. இது ஒரு கட்டத்தில் தள்ளு முள்ளுவாக மாறி, அதன் பின்னர், அடிதடியாக மாறியது.

ரசிகர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர். இது கடைசியில் ரசிகர்களுக்கு மத்தியில் சண்டையாக மாறியது. இப்படியான நிலையில் ரசிகர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. ரசிகர்களின் இந்த செயலை எதிர்பார்க்காத திரையரங்க ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு, ரசிகர்களை திரையரங்கில் இருந்து வெளியேற்றினர். இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் நடைபெற்றிருந்தாலும், இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த செயல் விக்ரம் மற்றும் வீர தீர சூரன் படத்தின் குழுவினருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Fight between vikram fans after Veera Dheera Sooran Not Release Ramanathapuram

விக்ரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் வீர தீர சூரன் பாகம் 2. விக்ரமின் 62 வது படமான இந்த படத்தில் விக்ரம் உடன் எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். படம் முழுக்க முழுக்க ஒருநாள் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் முதல் 20 நிமிடங்களை தவர விட வேண்டாம் எனவும் இயக்குநர் அருண்குமார் தெரிவித்தது, ரசிகர்களை மேலும் குஷியாக்கியது.

படத்தின் டீசர் மற்றும் டிரைலர் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த படத்தோடு போட்டிக்கு தமிழில் எந்த படமும் வராததால், படக்குழு ஆரவாரத்தோடு படத்திற்கான புரோமோசன் பணிகளில் ஈடுபட்டது. குறிப்பாக விக்ரம் அனைத்து வகையான புரோமோசன்களிலும் ஈடுபட்டார். எனவே, இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆர்வமும் எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இப்படியான நிலையில் படத்தை, நான்கு வாரங்களுக்கு ரிலீஸ் செய்யக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்தையும் அதன் உரிமையாளரான ரியா ஷிபுவையும் கடுமையாக திட்டத் தொடங்கியுள்ளனர். படத்தின் மற்றொரு தயாரிப்பு நிறுவனம் தொடுத்த வழக்கினால் தான் படத்தின் ரிலீஸில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

Fight between vikram fans after Veera Dheera Sooran Not Release Ramanathapuram

வீர தீர சூரன் படத்தின் காலை 9 மணி சிறப்பு காட்சிகளுக்கு டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு ஆவலாக காத்துக் கொண்டு இருந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. படம் ரிலீஸ் ஆகாது என தெரிந்த பின்னரும் ரசிகர்கள் தியேட்டரை விட்டு வெளியேறவில்லை. திருநெல்வேலியில் உள்ள புகழ் பெற்ற திரையரங்கமான ராம் சினிமாஸ் தியேட்டர் வாசலில் ரசிகர்கள் மேள தாளத்துடன் படம் ரிலீஸ் தொடர்பான அறிவிப்பு வரும் என காத்துக் கொண்டு உள்ளார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இப்படியான நிலையில்தான் ராமநாதபுரத்தில் ஒரு தியேட்டரில் ரசிகர்களுக்கு இடையே அடிதடி ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X