'உனக்கு வேலையே இல்ல'... மேடையில் இசையமைப்பாளருடன் சண்டை போட்ட பிரபல நடிகை!
இசையமைப்பாளர் அம்ரீஷ் மீது நடிகை சிருஷ்டி மேடையிலேயே கோபப்பட்டார்.
Recommended Video

சென்னை: கதிர் நடிக்கும் சத்ரு படத்தில் ஹீரோயின் சிருஷ்டி டங்கேவுக்கு வேலையே இல்லை என இசையமைப்பாளர் அம்பரீஷ் கூறியதால், இருவருக்கும் இடையே மேடையிலேயே பிரச்சினை ஏற்பட்டது.
நவீன் நஞ்சுண்டான் இயக்கத்தில், கதிர், சிருஷ்டி டங்கே, லகுபரண் நடிக்கும் படம் சத்ரு. க்ரைம் திரில்லர் படமான சத்ரு, வரும் 8ம் தேதி ரிலீசாகிறது. இதையொட்டி படக்குழுவினர் நேற்று செய்தியார்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய படத்தின் இசையமைப்பாளர் அம்பரீஷ், ஹீரோயின் சிருஷ்டிக்கு படத்தில் வேலையே இல்லை என்றார். இதை கேட்டதும் சிருஷ்டி கோபப்பட்டார்.

மூன்று பாடல்கள்
நிகழ்ச்சியில் அம்பரீஷ் பேசியதாவது, "இந்த படத்திற்கு என்னை இசையமைக்க அழைத்தனர். க்ரைம் திரில்லர் படம் என்றதும் மனதளவில் நிறைய தயாரானேன். இந்த படத்திற்காக மூன்று பாடல்கள் அமைத்தேன். ஆனால் ஒரு பாடல் கூட படத்தில் இல்லை.

ஒரு பாடல் கூட இல்லை
ஒரேயொரு பாடலாவது வைப்பார்கள் என நினைத்தேன். இயக்குனர் நவீன் முதலில் 4 நிமிடங்களுக்கு ஒரு பாடல் வைத்தார். பிறகு அதை 3 நிமிடமாக சுருக்கினார். பின்னர் 2 நிமிடமாகி, 20 நொடிகளாகி, கடைசியில் மொத்தமாக அந்த பாட்டையே தூக்கிவிட்டனர்.

வேகத்தடையான பாடல்கள்
படத்தின் வேகத்திற்கு பாடல் ஒரு தடையாக இருக்கும் என்பதால் தான் இயக்குனர் இவ்வாறு செய்துள்ளார் என்பதை தான் புரிந்துகொண்டேன். பின்னணி இசையையும் வேறு ஒருவர் தான் அமைத்துள்ளார். எனவே இந்த படத்தில் எனக்கு வேளையே இல்லை.

ஹீரோயின் சிருஷ்டி டங்கே
என்னை போலவே ஹீரோயின் சிருஷ்டிக்கும் இதில் வேலை இருக்காது. இது ஒரு ஹீரோவுக்கு முக்கியத்துவம் உள்ள படம். இருந்தாலும் சிருஷ்டி சிறப்பாக தான் நடித்திருக்கிறார்", என அம்பரீஷ் கூறினார்.

கோபப்பட்ட சிருஷ்டி
இதை கேட்டதும் சிருஷ்டியின் முகம் மாறிவிட்டது. மிகுந்த கோபத்து ஆளான அவர், அம்பரீஷ் பேசி முடித்த பின்னர், அவரிடம் சண்டை போட்டார். மேடையிலேயே அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். பிறகு இருவரும் சமாதானமாகிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











